Sunday, April 2, 2023

உண்மையிலேயே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கிய காரணமே இவை தான் !! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க

தொடர்புடைய கதைகள்

வெரிகோஸ் வெயின் தொடர்பான தோல் மாற்றங்களை எளிய முறையில் சரிசெய்வது எப்படி!

கால்கள் இயற்கையாகவே உங்கள் நரம்புகளால் பச்சை குத்தப்பட்டால், அது கவலைக்குரிய விஷயம்....

உங்கள் மூளை சக்தியை அதிகரிக்க இத ட்ரை பண்ணுங்க

நீங்கள் மறதியாக உணர்கிறீர்களா அல்லது கவனம் செலுத்த சிரமப்படுகிறீர்களா? உங்கள் உணவுமுறை...

கால்-கை வலிப்பு ஆரம்பகால மரண அபாயத்தை அதிகரிக்கலாம் ஆய்வு அறிக்கை

ஊதா தினத்திற்கு முன்னதாக ஒரு புதிய ஆய்வின்படி, கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு...

உங்க தலையில் கொத்து கொத்தாக தலை முடி கொட்டுகிறதா ? அப்ப இது உங்களுக்கு தான்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால்...

கணைய அழற்சி என்பது கணைய சுவர்களில் ஏற்பட்டுள்ள அழற்சியாகும்.

உடலில் எப்போது செரிமான நொதிகளின் ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, செரிமான நொதிகளானது கணையத்தையே தாக்க ஆரம்பிக்கிறதோ, அப்போது இப்பிரச்சனை ஏற்படுகிறது.

இப்பிரச்சனை இருந்தால், அடிவயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும்.

நாள்பட்ட கணைய அழற்சி கணையத்தின் செயல்பாட்டைக் குறைக்கும். இதன் விளைவாக உடலில் சாதாரணமாக சுரக்கப்படும் செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி திறன் குறையும்.

கணையத்தின் செயல்திறன் குறைந்தால், அது சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

கணையம் என்பது அடிவயிற்றில் ஆழமாக அமர்ந்திருக்கும் ஒரு தட்டையான சுரப்பி.

இந்த முக்கிய உறுப்பு செரிமான மண்டலத்தின் மென்மையான செயல்பாட்டிற்குத் தேவையான பல்வேறு நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியுடன் தொடர்புடையது.

கணைய அழற்சியில் இரண்டு வகைகள் உள்ளன.

கடுமையான கணைய அழற்சி

நாள்பட்ட கணைய அழற்சி

கடுமையான கணைய அழற்சி குறுகிய காலத்தில் குணமாகக்கூடியது. பெரும்பாலும் கடுமையான கணைய அழற்சியால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் 5-10 நாட்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.

அதுவே நாள்பட்ட கணைய அழற்சி பல ஆண்டுகளாக வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகளால் நீடித்திருக்கும்.

இப்போது நாம் காணவிருப்பது கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகளையும், காரணங்களையும் குறித்து தான்.கடுமையான கணைய அழற்சி என்பது திடீரென்று கணையத்திற்கு ஏற்படும் அழற்சியாகும். இதனால் சந்திக்கும் அசௌகரியமானது லேசானது முதல் மிதமானதாக இருக்கும்.

சரியான சிகிச்சையின் மூலம் பெரும்பாலும் இதை முற்றிலும் சரிசெய்ய முடியும். ஆனால் தீவிர நிலையில் கடுமையான கணைய அழற்சியினால் தொற்றுக்கள், கணைய சுரப்பியில் இரத்தக்கசிவு, கட்டி உருவாக்கம் மற்றும் தீவிரமான திசு பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

முக்கியமாக கணைய அழற்சி தீவிரமானால், அது மற்ற முக்கிய உறுப்புக்களான நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் போன்றவற்றிலும் பாதிப்பை உண்டாக்கும்.நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு இதுபோன்ற கணைய அழற்சி ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆப்பிள் சீடர் வினிகரில் பெரும்பாலும் கிருமிநாசினி காரணிகள் அதிகமாக உள்ளது. இவை உடலில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்க வல்லது.

ஆப்பிள் சீடர் வினிகரை இப்பொழுது பலரும் பயன்படுத்த துவங்கி வருகின்றனர். இது ஏற்படுகின்ற அந்த வலியை குறைக்க வல்லது.

மேலும் ஆப்பிள் சீடர் வினிகர் ஏற்கனவே நீங்கள் குடித்து வரும் பழக்கத்தில் இருந்தீர்கள் என்றால், பிளாடர்லுள்ள கற்களை இது நீக்கிவிடும்.

இயற்கையாகவே உங்களுக்கு இது போன்ற வயிற்று வலிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். இது உடல் எடையை சரிவர கொண்டுசெல்லவும் மிகவும் உதவி செய்கிறது.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் எனப்படுபவை மனித உடலுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச் சத்தாகும் இவை பல மருந்து கடைகளில் மருந்தாகவும் கிடைக்கிறது சில இயற்கை உணவு வகையிலும் ஒமேகா 3 ஆசிட் உள்ளது.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் எனப்படுபவையில் இயற்கையாகவே கிருமி நாசினிகள் இருக்கின்றன. இது வயிற்று வலியைப் போக்குவதற்கு நல்ல முறையில் பலன் கிடைக்கின்றன.இஞ்சி டீ என்பது வயிற்றுப் பகுதியில் உள்ள கிருமிகளை நாசம் செய்யக் கூடிய கிருமி நாசினி கொண்டது.

மேலும் இஞ்சி டீயில் இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது.இஞ்சி டீயை செய்வதற்கு ஒரு அரை துண்டு இஞ்சியை எடுத்து கொண்டு ஒரு கப் சூடான நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

குறைந்தது பத்து நிமிடமாவது கொதிக்க விடவேண்டும். பின்பு தேவைப்பட்டால் அதில் சிறிது தேனை ஊற்றிக் கொள்ளலாம்.

தேன் இல்லாமலும் குடிக்கலாம். ஆனால் காரம் அதிகமாக இருப்பதினால் தேன் ஊற்றி கொள்வது நல்லது. முக்கியமாக இதில் சீனி சேர்க்கக் கூடாது.

சீனிக்கு பதில் தேன் மட்டுமே சேர்க்கவேண்டும். தினமும் இரண்டு முதல் மூன்று தரம் இதுபோன்று இஞ்சி டீ குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

இஞ்சி டீ மட்டுமில்லாமல் இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

சமீபத்திய கதைகள்