Wednesday, March 29, 2023

உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீரிழிவு நோயிலிருந்து விடுபட ஒரே ஒரு மூலிகை பொடி போதும் !!

Date:

தொடர்புடைய கதைகள்

கால்-கை வலிப்பு ஆரம்பகால மரண அபாயத்தை அதிகரிக்கலாம் ஆய்வு...

ஊதா தினத்திற்கு முன்னதாக ஒரு புதிய ஆய்வின்படி, கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு...

உங்க தலையில் கொத்து கொத்தாக தலை முடி கொட்டுகிறதா...

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால்...

உங்களுக்கு அடிக்கடி பசிக்குதா? அப்ப இது உங்களுக்கு தான்...

பசி என்பது திடீரென்று வந்தால் பரவாயில்லை. உணவு உண்ட பின்பும் அதிக...

குழந்தைகளை போல மென்மையான கைகளைப் பெற 6 வீட்டு...

நமது கைகள் மாசு, தூசி மற்றும் சூரிய பாதிப்பு போன்ற பல்வேறு...

எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மை மற்றும் தீமை பற்றிய...

வைட்டமின் சி ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மற்றும் குறைபாடு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்....

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்னும் இந்த வியாதி பலரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது.

சர்க்கரை வியாதி என்பது கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.உடலில் உள்ள கணையம் என்னும் பகுதி இன்சுலினை சுரக்க வைக்கின்றது. இந்த இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவது தான் சர்க்கரை வியாதி என்று அழைக்கப்படுகின்றது.

உடம்பில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது உடலில் சிறுநீரகம், இதயம், இரத்த நாளங்கள், எலும்புகளையும் கூட இவ்வியாதி பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் வரும்போதே எச்சரிக்கையாக இருந்தால் அதை கட்டுக்குள் வைக்க முடியும்.

அந்தவகையில் இதை கட்டுக்குள் வைக்க ஒரு சில தெய்வீக மூலிகைகள் உதவுகின்றது. தற்போது அவை குறித்து பார்க்கலாம்.

வேப்பிலை, வில்வம், அத்தி இலை, முருங்கை இலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழா நெல்லி, மாவிலை, வெற்றிலை, தும்பை எல்லாவற்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும். இதை கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.

தினமும் உணவுக்கு முன்பாக கால் டீஸ்பூன் அளவு இதை எடுத்து நீரில் கலந்து பொறுமையாக குடிக்கவும். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஆகாரத்துக்கு முன்பு எடுத்துகொள்ளவும்.

இந்த மூலிகை பொடி தொடர்ந்து எடுத்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை நோயால் வரக்கூடிய உபாதைகளை தவிர்க்க முடியும்.

ஒரு நேரம் இயற்கை உணவு எடுக்க வேண்டும். தானியங்கள், கொட்டைகள், காய்கள், கீரைகள், பழங்கள் போன்றவை உணவில் இருக்க வேண்டும்.

தினசரி உணவில் ஒரு வேளை பழங்கள், காய்கறிகள், ஃப்ரூட் சாலட், வெஜிடபிள் சாலட் எடுக்கலாம்.

பப்பாளி, தக்காளி, மாதுளை, நாவல், கொய்யா, பிளம், நுங்கு, சீத்தாப்பழம், ஆரஞ்சு, அன்னாசி, அத்திப்பழம், மாம்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஒரு வேளை உணவுக்கு போதுமானதாக இருக்கும்.

வெண்டை, வெள்ளரிக்காய், முட்டை கோஸ், புடலங்காய், நெல்லிக்காய், நூக்கல், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெண்பூசணி, பேரிக்காய், தேங்காய் போன்றவற்றை சேர்க்கலாம்.

சமைத்த உணவுகளிலும் ராகி, கோதுமை, மக்காச்சோளம், பட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.

நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

சமீபத்திய கதைகள்