Saturday, April 27, 2024 6:55 am

அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது; சிஇஜி, எம்ஐடி முதலிடம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) சராசரி கட்-ஆஃப் 200க்கு 198.90 பெற்று முதலிடம் பிடித்தது. குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இரண்டாவது இடத்திலும் (196.69), கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (196.65) மற்றும் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி (195.50) இரண்டாமிடத்திலும் உள்ளன.

சென்னையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா-ஐசிஏஎம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 12வது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னையின் புறநகரில் உள்ள ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி 4வது இடத்திலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி 9வது இடத்திலும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி 12வது இடத்திலும் உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பும் கல்லூரிகளின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த கல்லூரிகளை தரவரிசைப்படுத்துவதற்கு கணினி அறிவியல் அடிப்படையாக உள்ளது மற்றும் படிப்பை வழங்காத கல்லூரிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலைப் பார்த்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்