Tuesday, April 23, 2024 7:12 am

உங்க தலையில் உள்ள பொடுகை அடியோடு நீக்க இத யூஸ் பண்ணி பாருங்க !!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக பொடுகு என்பது நிரந்தரமாக போக கூடிய பிரச்சனை அல்ல. தலை முடியை அதிகம் பராமரிக்காத போது அவை அதிகமாக கூந்தலில் வெளிப்படக்கூடும்.

அப்போதும் இதை போக்க முயற்சிக்கவில்லையெனில் இவை தலையில் ஒட்டுண்ணி பிரச்சனைகளை பேன் ஈறு போன்றவற்றை உண்டாக்கி விடும் இது கூந்தலின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. எனவே இவற்றை முடிந்தவரை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.

அந்தவகையில் பொடுகு நீக்கும் ஆயுர்வேத எண்ணெய் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

திரிபலா பவுடர், வேப்பிலை பவுடர் அனைத்தையும் 10 கிராம் தனியாக எடுத்து 40 கிராம் மட்டும் சேர்த்து அகலமான பாத்திரத்தில் சேர்த்து வைக்கவும். இதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அலோவேரா ஜெல் சேர்த்து கொதிக்க விடவும். இதை மிதமான தீயில் வைத்து சூடாக்கவும். இவை 500 மில்லியாக மாறும் வரை கொதிக்கவைத்து இதை இறக்கி ஆறவைத்து வடிகட்டவும்.

இந்த கஷாயத்தை வடிகட்டி அகலமான பாத்திரத்தில் விட்டு இப்போது தேங்காயெண்ணெய் சேர்த்து விடவும். இப்போது எஞ்சியிருக்கும் மூலிகை பொடிகளை சேர்த்துவிடவும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விடவும். அதிலிருக்கும் நீர் முழுவதும் ஈர்த்து மூலிகையும் எண்ணெயும் ஆகும் வரை வைத்திருக்கவும்.

இந்த மூலிகைகள் அனைத்தும் நீரில் கலந்து கொதிக்க வைத்தாலும் கூட அடுப்பில் வைத்திருக்கும் போது அதன் சலசலப்பு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

இதை அறைவெப்பநிலையில் வைத்து இருந்தால் அந்த மூலிகைகள் இறுதியில் தங்கியிருக்கும். இதனோடும் ஆயில் சேர்க்கலாம். அல்லது மூலிகையில் பொடியை எடுத்து தனியாக வடிகட்டியும் சேர்க்கலாம். கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைப்பது பாதுகாப்பானது.

எப்படி பயன்படுத்துவது?
இதை விரல்களில் தொட்டு உச்சந்தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் பொடுகு, சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து விடும். தலைக்குளியலுக்கு முன்பு இதை கூந்தல் முழுவதும் தடவி பிறகு மறுநாள் காலை தலைக்கு குளிக்கலாம்.

இதை குழந்தகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக பயன்படுத்தினால் பொடுகு நிச்சயம் கட்டுக்குள் வரும். பாதிப்பில்லாமல் முடி வளர்ச்சிக்கும் உதவும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்