Sunday, December 4, 2022
Homeஆரோக்கியம்தப்பி தவறி கூட தயிருடன் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்! மீறினால் ஆபத்து ஜாக்கிரதை

தப்பி தவறி கூட தயிருடன் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்! மீறினால் ஆபத்து ஜாக்கிரதை

Date:

Related stories

காபூலில் பாகிஸ்தானின் தூதரகத் தலைவர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்

பாகிஸ்தானின் காபூலுக்கான தூதரகத் தலைவர் உபைத்-உர்-ரஹ்மான் நிஜாமானி கொலை முயற்சியில் இருந்து...

பெங்கால் மகளிர் டி20 ப்ளாஸ்ட் பட்டத்திற்காக ஆறு அணிகள் போராட உள்ளன

திங்கட்கிழமை முதல் பிர்பூமில் உள்ள எம்ஜிஆர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறும் பெங்கால்...

துணிவு படம் அயோக்கியர்களின் ஆட்டம் 🔥துணிவு படத்தை பற்றி வினோத் பேட்டி இதோ !!

நேர்காணல் செய்பவர் மற்றும் நேர்காணல் செய்பவர் இருவரும் தங்களுடைய தடைகள், தப்பெண்ணங்கள்,...

தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் 2வது சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான வரிசு குறித்த சமீபத்திய அப்டேட்...

தமிழ்நாடு மருத்துவமனையின் 1.5 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் விற்கப்படுகின்றன

தமிழ்நாட்டின் ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த 1.5 லட்சம் நோயாளிகளின்...
spot_imgspot_img

தயிர் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம், வைட்டமின் பி-2, வைட்டமின் பி-12, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.

தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமான மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆனால் சில உணவுப் பொருட்களுடன் தயிர் சேர்க்கக் கூடாது என்பது பலருக்குத் தெரியாது.

தயிருடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடுவதால் சருமத்தை பாதிக்கலாம். பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும் தயிர், உலகின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.தயிருடன் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய பொருட்களின் பட்டியலில் மாம்பழம் முதலிடத்தில் இருக்கிறது. மாம்பழம் மற்றும் தயிர் இணைந்தால் உடலில் நச்சுகளை உற்பத்தி செய்யும்.

மீன் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிட வேண்டாம் மீனுடன் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இரண்டு உணவுகளிலும் புரதம் அதிகம். இரண்டு புரோட்டீன் நிறைந்த பொருட்களை ஒன்றாக இணைக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது அஜீரணம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.பாலுடன் தயிர் சேர்க்க வேண்டாம் பாலில் இருந்து தயிர் உருவானாலும் பாலுடன் தயிரை ஒன்றாக சாப்பிடக்கூடாது. இது வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தும்.

உளுத்தம்பருப்பை தயிருடன் சேர்த்து உட்கொள்வது செரிமான அமைப்பை சீர்குலைக்கும். இது அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும்.

தயிருடன் இணைந்த எண்ணெய் உணவுகள் செரிமானத்தை மந்தமாக்கும். நாள் முழுவதும் உங்களை சோம்பேறித்தனமாக உணர வைக்கும்.

பலரும் தயிர் பச்சடி என்றாலே வெங்காயம் தான் சேர்ப்பார்கள். ஆனால் இது தவறான பொருத்தம் என்கின்றனர். அதாவது வெங்காயம் சூடான பொருள் தயிர் குளிர்ச்சி. இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் அலர்ஜி, வயிற்றுக்கோளாறு, மந்த நிலையை உருவாக்கும் என்கின்றனர்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories