பொதுவாக பெண்களின் கூந்தலில் முடி உதிர்வுக்கு இந்த எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க !ஆரோக்கிய தகவல் !

0
பொதுவாக பெண்களின் கூந்தலில்  முடி உதிர்வுக்கு இந்த எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க !ஆரோக்கிய தகவல் !

கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் சிறந்த தீர்வாக உள்ளது.இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய்யை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம்.கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து, சூடுபடுத்த வேண்டும்.

இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இதைத் தினமும் பயன்படுத்தலாம்.

இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

No posts to display