மாங்காய் சாப்பிட்டு மாங்கொட்டைய இனி தூக்கி வீசிடாதீங்க..மாங்கொட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

பழங்காலம் முதல் எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமென்றால் அது மாம்பழம் மட்டும்தான்.

சாதாரணமாக மாம்பழத்தை ருசிக்கும் அனைவரும், அதன் சாற்றை கொட்டைவரை நன்கு உறிஞ்சி சுவைத்துவிட்டு, கொட்டையை வீசிவிடுவார்கள்.

சிலர் மட்டுமே, கொட்டையை எடுத்துப் போய், கவனமாக, ஒரு இடத்தில் விதைத்து வைப்பார்கள்.வருங்காலத்துக்கும் மாம்பழம் கிடைக்கவேண்டுமே என்ற அக்கறையால்! மாம்பழம் மட்டும் உடலுக்கு நன்மைகள் தருவதில்லை, அதன் மரப்பட்டை, இலைகள், பூக்கள் போன்றவையும், மருத்துவ குணங்கள் மிக்கவைதான்.

அதைவிட, மாம்பழத்தின் கொட்டைகள், அதிக பலன்களைத் தரவல்லவை. அதன் நன்மை தெரிந்தால் அதையும் பயன்படுத்தத் தொடங்கிவிடுவீர்கள்.மாங்காய் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பட்டர் பொடுகுத் தொல்லையை நீக்க உதவும். இதைப் பயன்படுத்துவதால் இளம் வயதில் ஏற்படும் நரை முடிப் பிரச்னையும் இருக்காது.

மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காயவைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும்.மாங்கொட்டைகளை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக்கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும். இதன் அறிகுறிகள் இருந்தால் முளையிலேயே கிள்ளிவிடலாம்.

கொழுப்புச் சத்து, மினரல் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் மாங்கொட்டை எண்ணெய்யை நீங்கள் பயன்படுத்தும் தலைமுடி எண்ணெய்யுடன் கலந்து தடவி வரத் தலைமுடிப் பிரச்னைகள் அனைத்தும் குறையும்.

மாங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதை முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாக இருக்கும். பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.