உங்களுக்கு மின்னல் வேகத்தில் சர்க்கரை அதிகரிக்குதா? உடனே குறைக்க இதை செய்யுங்க போதும் !!

0
39

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பது மிகவும் அவசியம்.

மின்னல் வேனத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சில இயற்கையான முறைகளை பின்பற்றலாம்.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்.திடீரென்று உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அது ஹைப்பர் கிளைசீமியா என்று அழைக்கப்படுகிறது. இந்த உயர் இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உடனடியாக சில இயற்கை நடைமுறைகளை பின்பற்றலாம்.

உடற்பயிற்சி செய்யுங்கள் – தினமும் உடற்பயிற்சி செய்து வருவது உங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இன்சுலின் உணர்திறன் உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது.

இதனால் நம் உடலில் உள்ள செல்கள் சர்க்கரையை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது. தசைகளும் அதிக இரத்த சர்க்கரையை பயன்படுத்துகின்றன.

​குறைந்த கார்ப் உணவுகள் – செரிமான செயல்பாட்டின் போது கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரைகளாக உடைகின்றன. எனவே குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.

காபி, டீக்களில் சேர்க்கப்படும் சர்க்கரையை குறைக்க வேண்டும்.நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகள் – இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதில் நார்ச்சத்துக்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் , இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படும் விகிதத்தையும் குறைக்க உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் டைப் 1 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் எடையை நிர்வகிக்கவும் – உடல் எடையில் 7% குறைப்பு கூட நீரிழிவு நோய் அபாயத்தில் 58% வரை குறைக்கலாம் என ஆராய்ச்சி கூறுகிறது. பெண்களுக்கு இடுப்பளவு 35 அங்குலத்திற்கு அதிகமாகவும், ஆண்களுக்கு 40 அங்குலத்திற்கு அதிகமாகவும் இருந்தால் கவனிக்க வேண்டும்.

அதிக அளவிலான இடுப்பளவு என்பது ஹைப்பர் கிளைசீமியா மற்றும் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் குடியுங்கள் – ஒரு ஆய்வின்படி, அதிக தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கிறது. அதிகளவு தண்ணீர் குடிப்பது சிறுநீர் வழியாக அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

தூக்கம் – போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது உங்களது இன்சுலின் உணர்திறனை பாதிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது குறைந்த அளவு வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் இரத்தத்தில் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் போதுமான தூக்கத்தை பெறுவது அவசியம்.