ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? நீங்களே பாருங்க

0
28

தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது ஒரு நிமிடம் செய்பவர்களுக்கு தோராயமாக 10 முதல் 25 கலோரிகள் குறைகிறது. அப்போது நீங்கள் 20 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால் 500 கலோரிகள் குறைகிறது.

தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.

கயிற்றில் துள்ளி குதிப்பது இதயத்தை வலிமையாக்கும். இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

கயிற்றில் குதிப்பது மன நிலையை மேம்படுத்தும். கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கச் செய்யும்.

ஸ்கிப்பிங் செய்வது உடலின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். விரைவாக சோர்வு எட்டிப்பார்க்கும் நிலையை மாற்றிவிடும்.

கவலை அல்லது மனச்சோர்வு அடையும் சமயத்தில் ஸ்கிப்பிங் பயிற்சி பெறலாம். அது உடல் நலனிலும், மன நலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தினமும் கயிற்றில் குதித்து பயிற்சி பெறுவது எலும்புகளை வலுவடையச் செய்யும்.

இந்த பயிற்சியின்போது அதிக வியர்வை உற்பத்தியாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். இதனால் சருமம் இயற்கையாகவே பொலிவு பெறும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பயிற்சியை உடனே தொடங்கிவிடுங்கள். இது மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி தொப்பையை குறைக்கும்.