Wednesday, May 1, 2024 1:29 am

பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

என் ராகவன் இயக்கத்தில் பல்துறை நடிகர் பிரபுதேவாவின் வரவிருக்கும் படம் ‘மை டியர் பூதம்’ அதன் திரையரங்கு வருகைக்கான சரியான தேதியை பூட்டியுள்ளது. பிரபுதேவா ஜெனி வேடத்தில் நடிக்கும் இப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார்.

முனிவரின் சாபம் காரணமாக பூதங்களின் தலைவனுக்கு தனது மகனைப் பிரிந்து பூமியில் சிலையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. திக்கு வாயால் சக மாணவர்கள் கேலி செய்ய மன அழுத்தத்தில் இருக்கும் சிறுவன் அஸ்வத் பூதத்தை விடுதலை செய்கிறான். சிறுவனின் மூலம் பூதம் தன் சொந்த உலகத்துக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சிறுவனின் மன அழுத்தம் நீங்கியதா? பூதம் மீண்டும் தனது உலகத்துக்கு சென்றதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கும் படம்தான் மை டியர் பூதம்.

பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் மை டியர் பூதம் படத்தை என்.ராகவன் இயக்கியிருக்கிறார். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்திருக்கிறார்.

பூதமாக மிக கச்சிதமாக பொருந்துகிறார் பிரபு தேவா. கார்டூன் கதாப்பாத்திரங்களை நினைவூட்டும் வகையில் அவரது செய்கைகள் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கின்றன. அவரைத் தொடர்ந்து மிக முக்கியமான வேடம் சிறுவன் அஸ்வத்துக்கு. சில இடங்களில் சற்று அதீதமாகவே தெரிந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

துவக்கத்தில் பூதம் சிறுவனுக்கு உதவும் காட்சிகள் சுவாரசியமாக தெரிந்தாலும், மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக அதே போன்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது.

அஸ்வத்தின் அம்மாவான ரம்யா நம்பீசன் யார், என்ன வேலை செய்கிறார் என்ற எந்த விளக்கமும் இல்லை. பள்ளியில் தொடர்ச்சியாக அஸ்வத் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகிறான். ஆசிரியர் சம்யுக்தா கூட அவரை மதிக்கவில்லை. சம்யுக்தா மட்டுமல்ல எந்த ஆசிரியரும் சிறுவன் அஸ்வத்துக்கு ஆதரவாக இல்லை. போட்டி ஒன்றில் அஸ்வத் வெல்ல, எல்லோரும் அவரை கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் சம்யுக்தா தவறை உணர்ந்து அஸ்வத்திடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படியான காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை பார்த்தால் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு அச்சம் ஏற்படுவது உறுதி.

சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படங்களை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என குடும்ப ரசிகர்கள் தலையில் கட்டிவிடுவது போல, இந்த மாதிரி படங்களை குழந்தைகள் கொண்டாடும் வெற்றி என குழந்தைகளிடம் வலிந்து திணிக்க முயற்சி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குழந்தைகள் கார்டூன் தொலைக்காட்சிகளில் பல சுவாரசியமான தொடர்களைப் பார்க்கின்றனர். அவற்றில் சிஜி தத்ரூபமாக சிறப்பாக செய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் மிக மோசமாக சிஜி காட்சிகள் உள்ள இந்தப் படத்தை குழந்தைகள் ரசிப்பார்கள் என நம்புவதில் நியாயமில்லை.

ஜெய் சங்கர், நாகேஷ் நடித்த பட்டணத்தில் பூதம் 1967ல் வெளியான படம். தொழில்நுட்ப வசதி பெரிதாக இல்லாத அந்தக் காலத்திலேயே பூதம் என்ற அம்சத்தை பிரத்யேக கேமரா கோணங்கள் மூலம் அழகாக படமாக்கியிருப்பார்கள். அந்தப் படத்தின் திரைக்கதையும் மிக வலுவாக இருக்கும். ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப வசதி இருந்தும் மிகவும் மோசமாக எடுக்கப்பட்ட படமாக மை டியர் பூதம் திரைப்படம் உள்ளது.

அழுத்தமான திரைக்கதை மற்றும் நல்ல சிஜி காட்சிகள் இருந்திருந்தால் ‘மை டியர் பூதம்’ என குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் சொல்லியிருப்பார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்