Wednesday, November 30, 2022
Homeசினிமாபிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!!

பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படத்தின் திரைவிமர்சனம் இதோ !!!

Date:

Related stories

ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிய ஸ்ருதி ஹாசன் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் எப்போதும் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக...

உம்ரானின் வேகம் குறைந்த வேகத்தில் பேட்டர்களை ஏமாற்ற உதவுகிறது: அர்ஷ்தீப் சிங்

அவர்களின் பந்துவீச்சு பாணிகள் சுண்ணாம்பு மற்றும் பாலாடைக்கட்டி போன்றது, ஆனால் உம்ரான்...

இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை மீனா? அம்பலமாகிய உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனா, தமிழ்...

ஜெட் வேகத்தில் ‘துணிவு’ பட புரோமோஷனுக்கு தயாரான அஜித்! அதிரிபுதிரியாக ரெடியாகும் துணிவு படக்குழு !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துணிவு’ பொங்கல் பண்டிகையின்...

லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா சீமான் ஆவேசம்

2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடும் என நாம்...
spot_imgspot_img

என் ராகவன் இயக்கத்தில் பல்துறை நடிகர் பிரபுதேவாவின் வரவிருக்கும் படம் ‘மை டியர் பூதம்’ அதன் திரையரங்கு வருகைக்கான சரியான தேதியை பூட்டியுள்ளது. பிரபுதேவா ஜெனி வேடத்தில் நடிக்கும் இப்படம் வரும் ஜூலை 15ஆம் தேதி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ளார்.

முனிவரின் சாபம் காரணமாக பூதங்களின் தலைவனுக்கு தனது மகனைப் பிரிந்து பூமியில் சிலையாக இருக்கும் நிலை ஏற்படுகிறது. திக்கு வாயால் சக மாணவர்கள் கேலி செய்ய மன அழுத்தத்தில் இருக்கும் சிறுவன் அஸ்வத் பூதத்தை விடுதலை செய்கிறான். சிறுவனின் மூலம் பூதம் தன் சொந்த உலகத்துக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. சிறுவனின் மன அழுத்தம் நீங்கியதா? பூதம் மீண்டும் தனது உலகத்துக்கு சென்றதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கும் படம்தான் மை டியர் பூதம்.

பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் மை டியர் பூதம் படத்தை என்.ராகவன் இயக்கியிருக்கிறார். அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரித்திருக்கிறார்.

பூதமாக மிக கச்சிதமாக பொருந்துகிறார் பிரபு தேவா. கார்டூன் கதாப்பாத்திரங்களை நினைவூட்டும் வகையில் அவரது செய்கைகள் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கின்றன. அவரைத் தொடர்ந்து மிக முக்கியமான வேடம் சிறுவன் அஸ்வத்துக்கு. சில இடங்களில் சற்று அதீதமாகவே தெரிந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.

துவக்கத்தில் பூதம் சிறுவனுக்கு உதவும் காட்சிகள் சுவாரசியமாக தெரிந்தாலும், மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக அதே போன்ற காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் தேங்கிவிடுகிறது.

அஸ்வத்தின் அம்மாவான ரம்யா நம்பீசன் யார், என்ன வேலை செய்கிறார் என்ற எந்த விளக்கமும் இல்லை. பள்ளியில் தொடர்ச்சியாக அஸ்வத் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளாகிறான். ஆசிரியர் சம்யுக்தா கூட அவரை மதிக்கவில்லை. சம்யுக்தா மட்டுமல்ல எந்த ஆசிரியரும் சிறுவன் அஸ்வத்துக்கு ஆதரவாக இல்லை. போட்டி ஒன்றில் அஸ்வத் வெல்ல, எல்லோரும் அவரை கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் சம்யுக்தா தவறை உணர்ந்து அஸ்வத்திடம் மன்னிப்பு கேட்கிறார். இப்படியான காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை பார்த்தால் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு அச்சம் ஏற்படுவது உறுதி.

சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படங்களை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என குடும்ப ரசிகர்கள் தலையில் கட்டிவிடுவது போல, இந்த மாதிரி படங்களை குழந்தைகள் கொண்டாடும் வெற்றி என குழந்தைகளிடம் வலிந்து திணிக்க முயற்சி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குழந்தைகள் கார்டூன் தொலைக்காட்சிகளில் பல சுவாரசியமான தொடர்களைப் பார்க்கின்றனர். அவற்றில் சிஜி தத்ரூபமாக சிறப்பாக செய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கையில் மிக மோசமாக சிஜி காட்சிகள் உள்ள இந்தப் படத்தை குழந்தைகள் ரசிப்பார்கள் என நம்புவதில் நியாயமில்லை.

ஜெய் சங்கர், நாகேஷ் நடித்த பட்டணத்தில் பூதம் 1967ல் வெளியான படம். தொழில்நுட்ப வசதி பெரிதாக இல்லாத அந்தக் காலத்திலேயே பூதம் என்ற அம்சத்தை பிரத்யேக கேமரா கோணங்கள் மூலம் அழகாக படமாக்கியிருப்பார்கள். அந்தப் படத்தின் திரைக்கதையும் மிக வலுவாக இருக்கும். ஆனால் இவ்வளவு தொழில்நுட்ப வசதி இருந்தும் மிகவும் மோசமாக எடுக்கப்பட்ட படமாக மை டியர் பூதம் திரைப்படம் உள்ளது.

அழுத்தமான திரைக்கதை மற்றும் நல்ல சிஜி காட்சிகள் இருந்திருந்தால் ‘மை டியர் பூதம்’ என குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் சொல்லியிருப்பார்கள்.

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories