பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வீட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட திடீர் சோகம் !! இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்

0
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வீட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட திடீர் சோகம் !! இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்

தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலனின் மனைவியும், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேல்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கணேசனின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் இன்று காலை மரணமடைந்துள்ளார்.

75 வயதாகும் புஷ்பா ஐசரி வேலன், இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார்.மேலும் இவரின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்புர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் அரசியல் பிரமுகராக இருந்தவர் ஐசரி வேலன். ஐசரி வேலன் – புஷ்பா தம்பதிக்கு அழகு தமிழ் என்ற மகளும் உள்ளார். மேலும் இவர் டாக்டர் மற்றும் கல்வியாளராக இருந்து வருகிறார். ஐசரி வேலனின் மகனான ஐசரி கணேசன் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆக இருந்து வருகின்றார்.

ஐசரி கணேசன், ரஜினியின் 2.ஓ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.அத்தோடு என்னை நோக்கி பாயும் தோட்டா, மூக்குத்தி அம்மன், தேவி, கோமாளி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வருகின்றார்.

ஐசரி வேலனின் பேரன் வருண், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர். அத்தோடு இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜோஸ்வா இமை போல் காக்க என்ற படத்தில் ஹீரோவாக நடத்து வருகிறார். இந்த படத்தையும் ஐசரி கணேசன் தான் தயாரித்து வருகிறார்.

ஐசரி வேலனின் மனைவி புஷ்பாவின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தமது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐசரி கணேசனின் குடும்பத்திற்கு நேரிலும், சோஷியல் மீடியா வாயிலாக இரங்கலும், ஆறுதல் தெரிவித்து வருகின்றார்கள்.

No posts to display