29 C
Chennai
Monday, February 6, 2023
HomeசினிமாAk 61 படத்தில் புதிதாக இணைந்த பிரபல மாஸ் நடிகர்.. அஜித் போட்டோவுடன்...

Ak 61 படத்தில் புதிதாக இணைந்த பிரபல மாஸ் நடிகர்.. அஜித் போட்டோவுடன் நீங்களே பாருங்க !

Date:

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தின் ட்ரெய்லர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை ஸ்டாலின்...

சமீபத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு...

வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் இதோ...

வாரிசு படத்தின் ரஞ்சிதாமே வீடியோ பாடலை தயாரிப்பாளர்கள் திங்கள்கிழமை சமூக...

அட்ரா சக்க! சிறப்பான தரமான 2 சம்பவம் தயார்!...

நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில்...

வெற்றி மாறனும் ஜூனியர் என்டிஆரும் இணையும் படத்தை பற்றிய...

வெற்றி மாறன் மற்றும் ஜூனியர் என்டிஆர் விரைவில் ஒரு திட்டத்தில் இணைந்து...

அஜித்தின் 61வது படம் தயாரிப்பில் உள்ளது, பிரபல நடிகர் இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார்.

இப்போது, ​​’ஏகே 61′ ஒரு பான்-இந்தியன் வெளியீடாக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அஜித்தின் கடைசி படமான ‘வலிமை’ பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் GM சுந்தர், AK 61 படத்தின் படப்பிடிப்பில் அஜித் உடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அஜித் உடன் சுந்தர் ஐதராபாத் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் மூலம் இது உறுதி ஆகியுள்ளது. நடிகர் அஜித் படத்தில் இரண்டாவது முறையாக G.M. சுந்தர் நடிக்கிறார்.

சுந்தர், சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்தவர். GM சுந்தர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஐஜி வேடத்தில் அரசு கதாபாத்திரத்தில் நடித்தவர்.

இவர் ஏற்கனவே மண்டேலா, காதலும் கடந்து போகும் , மகாமுனி, சீதகாதி உள்ளிட்ட சமீப படங்களிலும், 80 களில் புன்னகை மன்னன், சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய கதைகள்