Thursday, May 2, 2024 11:29 am

பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து, பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பஞ்சாப் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

“நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களை எவ்வாறு கிடப்பில் போட முடியும்? இதே நிலை தொடர்ந்தால், நாடாளுமன்ற கொள்கை அடிப்படையிலான ஜனநாயகம் சாத்தியமா?, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

மேலும், “ஆளுநர் ஒருவர் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடுவதற்குத் தகுதியற்றவர். இந்த விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது நடவடிக்கை, ஜனநாயகத்தின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

பின்னர் இந்த வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்