Thursday, May 2, 2024 5:44 pm

இந்தியர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்க மோகம் : வெளியான ஷாக் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பிடிபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை 96,917 பேர் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க அரசு தகவல் அளித்துள்ளது

இதில், கனடா வழியே 30,010 பேர், மெக்சிகோ வழியே 41,770 பேர் எல்லை தாண்டி நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலோனோர் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி பிடிபடுபவர்கள் வெறும் சிறிய விகிதம்தான். ஒருவர் பிடிபடும் போது, குறைந்தது 10 பேர் வெற்றிகரமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதாகக் குஜராத் போலீஸ் உயரதிகாரி கூறுகிறார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் பின்னணியில் பல காரணிகள் உள்ளன. அவற்றில் சில, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் அதிகம், இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை அதிகரிப்பு, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை எளிதாக்கும் வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிப்பு போன்ற காரணங்கள் ஆகும்.

இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கும் சவால்களை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்