Thursday, May 2, 2024 7:36 am

அஜித்துக்கு எப்பவுமே நான் நான் தான் சரியான டைரக்டர் என நிரூபித்து காட்டிய வினோத்.! வெளியான முழு ரிப்போர்ட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

2023 பொங்கலின் போது தளபதி விஜய்யின் வரிசு மற்றும் அஜீத் குமாரின் துணிவு ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் மோதிய கோலிவுட். இறுதியில், விஜய்யின் படம் வெற்றியீட்டியது, ஆனால் மறக்க முடியாதபடி, அஜித்தின் படம் கூட நல்ல வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது. . இப்போது, அதன் நிறைவு உலகளாவிய சேகரிப்பைப் பார்ப்போம்!

எச்.வினோத் இயக்கத்தில், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் வெளியானதும், விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், இது மக்கள் மத்தியில் நன்றாக வேலை செய்தது மற்றும் அதன் விளைவாக, உலகளவில் அவரது இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக இது மாறியது.
இயக்குனர் ஹச் . வினோத் சமூகத்திற்கு தேவையான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி அமைத்தார்.

ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டது இதில் அஜித் நடிக்க ஹச் வினோத் இயக்கினார் படம் வெளியாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 215 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாஸ் காட்டியது இன்றும் இந்த படத்தை பற்றிய பலரும் பாசிட்டிவாக பேசி வருகின்றனர்.

உடனே இந்த ஜோடி அடுத்த படத்தில் இணைந்தது. வலிமை என பெயர் வைத்தனர். அந்த நேரத்தில் கொரோனா பிரச்சனையின் காரணமாக படத்தின் சூட்டிங் சரியாக எடுக்க முடியவில்லை, தள்ளிக் கொண்டே போனது மேலும் ஊரடங்கு பிரச்சனை இருந்ததால் பிளான் பண்ணியப்படி ரீலிஸ் செய்ய முடியவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த பொழுதிலும் 250 கோடிக்கு மேல் வசூலி வெற்றி கண்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் , ஹச் வினோத் கூட்டணியில் துணிவு திரைப்படம் உருவானது. சொல்லப்போனால் ஹச் வினோத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படம். பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிகாட்டியது. ஆடியன்ஸ்க்கு ரொம்ப பிடித்து போகவே அதிக நாட்கள் ஓடியது.

துணிவு படம் வசூல் ரீதியாக 350 கோடி வசூலித்தது. OTT தளத்தில் கூட துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த மூன்று படங்களும் சேர்ந்து உலக அளவில் 815 கோடி வசூல் செய்தது. இந்தக் கூட்டணி மீண்டும் சேர்ந்தால் கூட ரசிகர்கள் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர்.

‘துணிவு’ ஒரு திருட்டு த்ரில்லர் என்று கூறப்படுகிறது, மேலும் படத்தின் திரைக்கதையை எழுதிய இயக்குனர் எச் வினோத் இயக்கியுள்ளார். ‘துணிவு’ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டிங் பகுதியை விஜய் வேலுக்குட்டி கையாண்டுள்ளார். அஜித் நடித்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

‘துணிவு’ ஒரு குழும நடிகர்களைக் கொண்டிருந்தது. நடிகர்கள் அஜித் குமார், மஞ்சு வாரியர், மகாநதி ஷங்கர், சமுத்திரக்கனி மற்றும் தர்ஷன் ஆகியோர் ஹீஸ்ட் த்ரில்லரில் குறிப்பிடத்தக்க முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்