Tuesday, June 25, 2024 8:15 am

முழுசா 5 வருட கதைக்களம் நிறைவு !பாண்டியன் ஸ்டோர் சோலியை முடித்த சீரியல் குழு ! வெளியான அதிர்ச்சி உண்மை

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சத்தியமூர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்பியதுடன் தொடங்குகிறது. தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சகோதரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குடும்ப உறுப்பினர் அவளை மருத்துவமனைக்கு விரைந்தார், அவள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர் அவர்களிடம் கூறுகிறார். தனலட்சுமியின் நிலையை கேள்விப்பட்ட சத்தியமூர்த்தி உடைந்து போகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எல்லா தப்பையும் பண்ணி விட்டு ஜீவா, கதிர் மீது முழு பழியையும் போட்டு விட்டு நல்லவன் போல நடிக்கிறான் பிரசாந்த். ஒருக்கட்டத்தில் அவனின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட மீனா, அதன்பின்னர் ஆதாரங்களுடன் அவனை கையும் களவுமாக பிடிக்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். ஆனாலும் அங்கிருந்து தப்பித்து வீட்டுக்கு வருகிறான் பிரசாந்த்.அங்கு வந்து பதட்டத்துடன் மல்லியிடம் பேசும் பிரசாந்த், அவசரமாக வெளியூருக்கு போக வேண்டும் என சொல்கிறான். எதுக்காக அவன் இவ்வளவு பதட்டத்துடன் இருக்கிறான் என அவளும் குழம்புகிறாள். சரியாக அவன் வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில் இரண்டு போலீஸ் வருகின்றனர். அவர்களிடம் இருந்தும்பிரசாந்த் எஸ்கேப் ஆகிறான்.அவர்களிடம் எதுக்காக பிரசாந்தை துரத்துறீங்க. என்னாச்சு என கேட்கிறாள். அப்போது தான் அவர்கள் முழு உண்மையும் சொல்கின்றனர். ஜனார்த்தனுடைய மேனேஜரை கொன்னு, அவரையும் சாகிற அளவுக்கு அடிச்சு இருக்கான் பிரசாந்த். அதுக்கப்புறம் மொத்த பழியையும் கதிர், ஜீவா மேல போட்டு இருக்கான் என சொல்கிறார்கள். இதனைக்கேட்டு கடுமையாக அதிர்ச்சியடைகிறாள் மல்லி.

இதனிடையில் வீட்டில் ஆதாரம் இருந்தும் ஜீவா, கதிரை வெளியில் எடுக்க முடியவில்லை என நினைத்து புலம்புகின்றனர். மல்லியும் அண்ணன் அண்ணனுன்னு போய் இவுக இப்ப ஜெயில்ல இருக்காங்க. அதுவும் இல்லாம மொத்த பழியும் இவுக மேல விழுந்து இருக்கு என ஆதங்கத்துடன் பேசுகிறாள். அதன்பின்னர மீனா ஹாஸ்பிட்டல் போன பிறகு மாப்பிள்ளை வெளிய வந்துட்டாரா என கேட்கிறாள் கலை.பிரசாந்தை பிடிச்ச பிறகு தான் வெளிய வருவாங்க என மீனா வருத்ததுடன் சொல்கிறாள். ஸ்வேதாவோட வாழ்க்கையும் இப்படி போச்சே என புலம்புகின்றனர். மீனாவும் தனது அப்பாவிடம் மகளுக்கு ஏதாவதுன்னா ஓடி வருவீங்கள்ள. இப்போ நீங்க கண் முழிச்சு உண்மையை சொன்னா தான் ஜீவா வெளிய வருவான் என சொல்லி கதறுகிறாள். அதன்பின்னர் முல்லை வந்ததும் பிரசாந்த் பற்றிய வீடியோவை காண்பிக்கிறாள்.

அதை பார்த்து ஸ்வேதா தலையில் அடித்து அழுகிறாள். அந்த நேரத்தில் ஜனார்த்தனன் கண் முழித்து விட்டதாக செய்தி வருகிறது. உடனே அனைவரும் உள்ளே போய் பார்க்கின்றனர். கண் விழித்த ஜனார்த்தனன் ஸ்வேதாவிடம் உன் வாழ்க்கையில நானே மண்ணள்ளி போட்டுட்டேனே என கலங்குகிறான். மீனாவிடமும் பேசுகிறான். அதன்பின்னர் போலீஸ் வந்து ஜனார்த்தனிடம் வாக்குமூலம் வாங்குகின்றனர். இதனை வைத்து ஜீவா, கதிர் எப்படியும் வெளிய வந்துடுவாங்க போல..

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் கிளைமாக்ஸுடன் தனது பயணத்தை விரைவில் முடிக்கவுள்ளது
5 வருட கதைக்களம் நிறைவு, முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனை பற்றிய முழு விவரங்களை விரிவாக இங்கு காணலாம்.ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல மெகா தொடர் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என சமூக வலைத்தளம் மற்றும் பல இடங்களில் ரசிகர்களால் சலசலப்பு எழுந்துள்ளது.

4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என இந்த கதை தொடங்கி தற்போது 4 சகோதரர்களும் கூட்டு குடும்பமாக வாழ்வது என இந்த சீரியல் உருவாகியுள்ளது. இந்த சீரியல் பல பிரச்சனைகள் மற்றும் பல்வேறு இன்னல்களை கடந்து 5 வருடங்களாக ரசிகர்களின் கவனத்தை பெற்று பல இல்லாதாரிகள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.நடிகர் சுஜாதா இந்த சீரியலில் ‘தனம்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை தியாகச்சுடர் என ரசிகர்கள் கிண்டலாக சமூக வலைத்தளத்தில் அழைத்துவருகின்றனர். இவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் விஷமுள்ள மனிதர்களுக்கும் நன்மைகளை எண்ணுபவராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்ட கதாபாத்திரம், முல்லை. இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்திருந்தார். முல்லை கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் ஆண்கள் என அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நடித்து அசத்தியுள்ளார், விஜே சித்ரா.

விஜே சித்ராவின் மறைவுக்கு பின், இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்திருந்தார். தற்போது விஜே லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், ஜனார்த்தனனின் இளைய மருமகனான பிரஷாந்த், வரவு செலவில் ஏற்பட்ட தகறாரில் ஜனார்தனனை தாக்கி அந்த பழியை கதிர் மற்றும் ஜீவா மீது சுமத்தி தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இவரை சூழ்ச்சி செய்து பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கும் நொடியில் பிரஷாந்த் தப்பித்து விட்டார்.

பின் ஜனார்த்தனன் சுயநிலை திரும்ப, அவரிடம் உண்மை வாக்குமூலம் வாங்கிய போலீஸ் பிரஷாந்த்-யை உடனடியாக கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கதிர் & ஜீவா இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணன் கதிரவன் கண்ணனின் கையைப் பிடித்து சத்தியமூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கிறான். கண்ணன் அவனைத் தள்ளிவிட்டு வெளியே சென்றான்.
மறுபுறம், பல போராட்டங்களுக்குப் பிறகு, தனலட்சுமி குழந்தையைப் பெற்றெடுத்தார், மேலும் முழு குடும்பமும் பிறந்த குழந்தையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்