Sunday, April 28, 2024 1:37 pm

கழிவறையில் தவறியும் இதை வீசாதீங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தலைமுடி சில வீடுகளில் எல்லா அறைகளிலும் முடி கிடக்கும். ஆனால், அவற்றைவிட ஆபத்து, கழிவறைகளில் கிடக்கும் முடி. நீர் வடியும் இடத்தில் கிடக்கும் முடி, ஃப்ளஷ் செய்யப்பட்டிருக்கும் முடி இரண்டுமே, செப்டிக் டேங்கைச் சென்றடைவதற்குள் ஏதாவது ஓரிடத்தில் அடைத்துக்கொண்டுவிடலாம். எனவே, சுத்தமாக அவற்றை அப்புறப்படுத்தவும்.
மேலும், இந்த பற்களைச் சுத்தப்படுத்த உபயோகிக்கும் ஃப்ளாஸை (Floss) பல் விளக்கிவிட்டு, அவற்றின் சிறு இடுக்குகளில் தேங்கியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய உபயோகப்படுத்தப்படுவது. இது நூல் போன்ற இதை உபயோகப்படுத்திய பிறகு சிலர், வாஷ்பேசினில் அப்படியே போட்டுவிடுவார்கள். முறையாகக் குப்பைகளுடன் சேர்த்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில், ஏதேனும் இடத்தில் சிக்கிக்கொண்டு பிரச்சனை செய்யும்.
மேலும், இந்த கழிவறையில் வைத்து குழந்தையைச் சுத்தம் செய்தவுடன், டிஷ்யூவை அப்படியே உள்ளே வீசி ஃப்ளஷ் செய்துவிடுவார்கள் சிலர். பொதுவாகக் காகிதங்கள் தண்ணீரில் கரையாது. பாதி வழியிலேயே அடைத்துக்கொள்ளும். எனவே கவனமாக இருங்கள்.
அதைப்போல், இந்த ஆணுறைகளை, ஃப்ளஷ் செய்தால், அவை செல்லும் பாதையில் எங்கேயோ ஓரிடத்தில் அடைப்பை ஏற்படுத்திவிடக்கூடும். குப்பைத்தொட்டியில் வீசுவதுதான் சரியான வழி, முடிந்தவரை டிஷ்யூ பேப்பரில் மடித்துக் குப்பைத்தொட்டியில் வீசுவது நல்லது. மேலும், இந்த நாப்கினை ‘நாப்கின் டிஸ்போசல் மெஷின்’ (Napkin Disposal Machine) இருந்தால், அதை உபயோகப்படுத்துங்கள். இல்லாதபட்சத்தில், பொது குப்பைத்தொட்டியில், காகிதத்தில் மடித்து அப்புறப்படுத்துங்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்