Tuesday, April 30, 2024 7:20 am

துருக்கி அதிபருக்கு ஹிட்லர் மீசை வரைந்த சிறுவன் கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
துருக்கி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டவர் எர்டோகன். இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக இவர் அதிபரானார். அப்போது, இந்த தேர்தலுக்காக ஒட்டப்பட்ட எர்டோகன் போஸ்டரில் ஒரு 16 வயதான சிறுவன் ஹிட்லர் போல் மீசையை வரைந்து, அதில் அவமதிக்கும் கருத்துக்களும் எழுத்திருந்தது இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமராவை வைத்து அந்த சிறுவன் யார் என்பதைக் கண்டறிந்து, அவனது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதில் அச்சிறுவன் தான் வரைந்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, காவல்துறையினர் நீதிமன்றத்தில் இச்சிறுவனை ஒப்படைத்தனர். பின்னர், அதிபரை அவமதித்ததின் காரணமாகச் சிறுவனுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
ஏனென்றால், அந்நாட்டு நீதி அமைச்சகத்தைப் பொறுத்தவரையில், அதிபரை அவமதிப்பது மாபெரும் குற்றமாகும். இதுவரை இந்த குற்றத்திற்காகக் கடந்த ஆண்டு மட்டும் 16,753 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்