வடிவேலு கூறிய அந்த ஒரு வார்த்தை !! அஜித்தின் தலைக்கு ஏறியதால் உருவான பிரச்சனை இது தான் !!

‘துணிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் அடர்ந்த தாடியுடன் காட்சியளித்தார். ‘துணிவு’ படத்தில் அஜித் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார், அதே நேரத்தில் தயாரிப்பாளர்கள் இரண்டாவது தோற்றத்தை ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும், வெள்ளிக்கிழமை (செப் 23) வெளியாகும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது போஸ்டர் மூலம் அதை வெளிப்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் ரசிகர்களால் செல்லமாக “தல” என்று அழைக்கப்படுபவர் அஜித்குமார். தற்போது அஜித்குமார் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.

அஜித் நடிகர் மட்டுமல்லாது கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல துறைகளில் திறமையானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே போல் அஜித் வெளியே தெரியாமல் பலருக்கும் உதவி வருகிறார் என்ற செய்திகளையும் நாம் அறிவோம்

இந்த நிலையில் அஜித்-வடிவேலுவுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு காரணமான ஒரு சம்பவத்தை குறித்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது. “என்னது அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் பிரச்சனையா?” என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது.

அஜித்-வடிவேலு காம்போவில் “ஆசை”, “ராசி” போன்ற சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அவர்கள் இணைந்து நடித்து வெளியான கடைசி திரைப்படம் “ராஜா”.

“ராஜா” திரைப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா, ப்ரியங்கா த்ரிவேதி போன்றோர் நடித்திருந்தனர். மேலும் அத்திரைப்படத்தில் அஜித்-வடிவேலு காம்போ செம்மையாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால் அத்திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடித்த எந்த திரைப்படத்திலும் வடிவேலு இடம்பெறவில்லை.

அப்போதே இருவருக்குள்ளும் சில பிரச்சனைகள் ஓடுவதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கான காரணம் குறித்து ஒரு சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது “ராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்தை அவ்வப்போது அனைவரின் முன்னும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார் வடிவேலு. இது அஜித்துக்கு சங்கடமாக இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தான் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் வடிவேலுவை இடம்பெறாதவாறு பார்த்துக்கொண்டாராம் அஜித். என்ன தான் வடிவேலு வயதில் மூத்தவர் என்றாலும், ஒரு ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகரை அப்படி கூப்பிட்டால் சங்கடம் உருவாவது இயல்புதானே??

எச்.வினோத் இயக்கும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால், தயாரிப்பாளர்கள் வெளிநாட்டிற்கும் ஹைதராபாத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்கும், இதில் அஜித் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார், மேலும் முதல் சிங்கிள் அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.