Monday, April 22, 2024 5:44 am

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம் ‘ படம் எப்படி சக்கையா சப்பையா விமர்சனம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக இருப்பதால், டிஎன்ஏ காம்போ மீண்டும் வருகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தனுஷ் ஃபுட் டெலிவரி பாய் மற்றும் ஒரு ‘பழம்’ வாழ்க்கையை சித்தரிக்கிறார். பிரகாஷ் ராஜ் அவரது அப்பா, கடந்த காலத்தில் நடந்த ஒரு இருண்ட சம்பவத்திற்குப் பிறகு அவர்களுக்கு இடையே விஷயங்கள் சரியாக இல்லை. அவர்கள் எவ்வாறு மீண்டும் இணைகிறார்கள் என்பது கதையின் மையக்கருவாக அமைகிறது

ஒன்றரை வருடம் கழித்து தியேட்டருக்கு வந்துள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்.

சமீபத்தில் வெளியான கார்த்தியின் விருமன் படத்தைப் போல இந்த படத்திலும் திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் அவரது அப்பா பிரகாஷ் ராஜ் பேசிக் கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணமும் அம்மாவின் இழப்பு தான். தாத்தா பாரதிராஜாவின் திருச்சிற்றம்பலம் பெயரையே பேரன் தனுஷுக்கு வைக்கின்றனர். தனுஷின் நண்பர்கள் பழம் பழம் என அவரை கிண்டல் செய்கின்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த தனுஷ் ஸ்விக்கி, ஜோமேட்டோ போல DOINK எனும் உணவு டெலிவரி பாயாக வேலை செய்வதை பார்த்து அவரது நண்பர்கள் கிண்டல் செய்ய அவர்களுடன் சண்டைப் போடும் காட்சியாக இருக்கட்டும், ராஷி கன்னாவை கரெக்ட் செய்ய கவிதை எழுதிக் கொண்டு நித்யா மேனனிடம் படிக்கும் காட்சியாகட்டும் தனுஷை விட அந்த இடங்களில் நித்யா மேனன் நடிப்பு பிரமாதம். சோபனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனன் காதலியாகிறாரா? இல்லையா? என்பது தான் திருச்சிற்றம்பலம் படத்தின் கதை.

யாரடி நீ மோகினி படத்தை போல முதல் பாதி சிட்டி, இரண்டாம் பாதியில் கொஞ்சம் நேரம் கிராமத்துக்கு கதை பயணிக்கிறது. உத்தமப்புத்திரன் உள்ளிட்ட படங்களில் காமெடி மித்ரன் ஜவகருக்கு எந்தளவுக்கு கை கொடுத்ததோ அந்த அளவுக்கு இந்த படத்திலும் காமெடி கை கொடுத்திருக்கிறது. சோபனா மற்றும் திரு செய்யும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன. கவிதை காமெடியில் பாரதிராஜா கலக்கல்.

இடைவேளைக்கு பிறகு அப்பா பிரகாஷ் ராஜ் அவனுக்கு என்னத்தான் வேணுமான்னு கேட்க, அம்மாவையும் தங்கச்சியும் திருப்பிக் கொடுன்னு பேசும் இடங்களாகட்டும், “ஊர் பூரா தேடாதே.. கூட இருகிறவள பாரு என்று” பாரதிராஜா நித்யா மேனனை பற்றி பேசும் இடமாகட்டும் சென்டிமென்ட் நல்லாவே செட் ஆகுது. தாத்தா நல்லா இருக்க, போலீஸ் அதிகாரியான அப்பாவுக்கு திடீரென ஸ்ட்ரோக் வருவது திணிக்கப்பட்டதை போல உள்ளது. நித்யா மேனனின் தம்பியாக நடித்துள்ள விஜே பப்புவின் சென்டிமென்ட் காட்சியும் ரசிகர்களை நெகிழச் செய்கிறது.

நடிகர்கள் தேர்வு புதிய படத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. அனிருத்தின் இசை இளையாராஜா டச்சை அடிக்கடி ஞாபகப்படுத்தினாலும் மேகம் கருக்காதா பாடலில் லாலா லேண்டுக்கே கொண்டு சென்ற உணர்வு சிறப்பு. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கு. பிரியா பவானி சங்கரின் அந்த கேமியோ ரோல் சூப்பர். தனுஷ், நித்யா மேனன் கெமிஸ்ட்ரி திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரிய பலம்.

பிரசாந்த் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும், தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி, கார்த்தியின் லேட்டஸ்ட் விருமன் என திருச்சிற்றம்பலம் படம் முழுவதும் புதுசா எதுவுமே இல்லாமல் அரைத்த மாவையே கொஞ்சம் காமெடி முந்திரி, திராட்சைகளை தூவி அரைத்திருப்பது தெளிவாக தெரிவது புதிய படத்தை பார்த்த ஃபீலை கொடுக்கவே இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் சிரித்து மகிழலாம். திருச்சிற்றம்பலம் – பழைய கதை ஆனால் புதிய வடிவம்!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்குப் பிறகு மித்ரன் ஜவஹர் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது.

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். டிஎன்ஏ ஜோடி 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது, மேலும் அவர்களிடமிருந்து சார்ட்பஸ்டர் இசையை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மித்ரன் ஜவஹருடன் தனுஷ் நான்காவது முறையாக இணைகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘குட்டி’, ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரேன்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்