Monday, April 29, 2024 9:39 pm

காத்து வாங்கும் தியேட்டர்கள் !! அதள பாதாளத்திற்கு சென்ற அமீர்கான்!! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லால் சிங் சத்தா பாக்ஸ் ஆபிஸ்: டாம் ஹாங்க்ஸின் ஃபாரெஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கான ஆமிர் கானின் படம், ரக்ஷா பந்தன் அன்று வெளியான முதல் நாளில் வெளியானது

பாலிவுட்டை அமீர்கான் படம் வந்தாவது காப்பாற்றும் என எதிர்பார்த்த நிலையில், அமீர்கானையே இப்போ யாரு காப்பாத்துவான்னு தெரியாத நிலைமைக்கு கொண்டு வந்து விட்டது லால் சிங் சத்தா படத்தின் முதல் நாள் வசூல்.

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படத்திற்கே முதல் நாளில் இதை விட கலெக்‌ஷன் அதிகமாக இருக்கும் என்றும் அமீர்கானின் தயாரிப்பில் வெளியான படத்திற்கு செம அடி என்றும் பாலிவுட் ரசிகர்கள் பாய்காட் டிரெண்டிங் வென்று விட்டது என கொண்டாடி வருகின்றனர்.

அதுல் குல்கர்னி தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தை நம்ம நாட்டுக்கு ஏற்றப்படி மாற்றி எழுதியது எல்லாம் நல்லா தான் இருந்தது. ஆனால், அதில் அவர் அமீர்கான் மற்றும் கரீனா கபூரை போட்டு தப்பு செய்து விட்டார் என திரைக்கதையாசிரியர் அதுல் குல்கர்னி மற்றும் படத்தை இயக்கிய அத்வைத் சந்தனை ட்ரோல் செய்து வருகின்றனர்.

லால் சிங் சத்தா திரைப்படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் என கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. அமீர்கானின் அந்த பிகே நடிப்பு படத்தை மொத்தமாக கெடுத்து விட்டதாக படம் பார்த்த பலரும் விளாசி உள்ளனர். மற்ற இடங்களில் அமீர்கான் ஸ்கோர் செய்தாலும், பாய்காட் லால் சிங் சத்தா டிரெண்டிங் தான் இந்த முறை ஜெயித்து விட்டது என்கின்றனர்

அமீர்கானின் லால் சிங் சத்தா முதல் நாளில் 15 கோடி தான் வசூல் செய்யும் என கணிப்பே குறைவாக இருந்த நிலையில், 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் வெளியான இந்த படம் முதல் நாளில் 11 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாளிலேயே 11 கோடி மட்டுமே வசூல் செய்துள்ள நிலையில், இந்த படத்துக்கு ஏன் அமீர்கான் 180 கோடி பட்ஜெட் செய்து காசை கரியாக்கி விட்டார் என்றும் பாலிவுட்டில் மற்றொரு டிசாஸ்டர் படமாக லால் சிங் சத்தா படம் மாறி விட்டது என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சீக்கிரமாக ஓடிடிக்கு நல்ல தொகைக்கு விற்று ரிலீஸ் செய்தால் கொஞ்சமாவது தப்பிக்கலாம் என்றும் அமீர்கானுக்கு அட்வைஸா பறக்கின்றன.

அமீர்கான் படத்துக்கும் பாலிவுட்டில் ரசிகர்கள் மரண பயத்தை காட்டிய நிலையில், கங்கனா ரனாவத் பயங்கர ஹேப்பி ஆகிடுவாங்க என பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். காதலித்த மனைவிகளை கழட்டி விட்ட நிலையில், இந்த வயதில் அமீர்கான் காதல் படத்தில் நடித்தால் எப்படி ஓடும் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

டாம் ஹாங்க்ஸ் நடித்த 1994 ஆம் ஆண்டு அகாடமி விருது பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் சீக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான், நாக சைதன்யா மற்றும் மோனா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்