Saturday, April 20, 2024 3:25 pm

எஸ். ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமையை செய் படத்தின் விமர்சனம் இதோ !!!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

Kadamaiyai Sei Movie Review வெங்கட் ராகவன் எழுதி இயக்கிய கடமையைச் செய் படத்தில் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத், சேசு, ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மேலும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். யு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் 2 மணிநேரம் 23 நிமிடங்கள் ஓடக்கூடியவை.இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இசைக்கு அருண்ராஜ், ஒளிப்பதிவுக்கு வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்புக்கு ஸ்ரீகாந்த் என்.பி.

இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா நடிகராக மாறி தமிழ் திரை உலகில் கலக்கி வருகிறார். அதிலும் வில்லனாக அவர் நடிக்கும் படத்தில் ஹீரோவை விட அதிகம் பாராட்டு வாங்குகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தை விட எஸ்.ஜே.சூர்யாவிற்கு அதிக ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். அந்த வகை எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

கடமையை செய் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், வின்செட் அசோகன், சார்லஸ் வினோத் போன்றோர் நடித்துள்ளனர். சிவில் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா மனைவி யாஷிகா ஆனந்த் மற்றும் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று அவருக்கு வேலை பறிபோக ஒரு பிளாட்டில் வாட்ச்மேனாக வேலைக்கு செல்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து நடக்க, கோமா போன்ற ஒரு புதிய நோயால் அவதிப்படுகிறார். உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? அந்த நோயிலிருந்து மீண்டாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே கடமையை செய் படத்தின் கதை.

மற்ற படங்களை போல் இல்லாமல் சற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டாம் பாதி முழுக்கவே வசனமே இல்லாமல் உடல் அசைவுகளாலும், முகபாவனைகளால் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அவரது மனைவியாக வரும் யாஷிகா ஆனந்த் வழக்கம் போல நடிப்பே வராத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்த படம் எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து விடுகிறது. கதையை விட டெக்னிக்கலாகவே இந்த படம் மிகவும் சுமாராக உள்ளது. படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பு மேலும் இந்த படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக படத்தில் காமெடி என்று நினைத்து வைத்துள்ள எதுவும் கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை, மாறாக கோபத்தை தான் வரவழைக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் மாமனாராக வரும் சேசுவை வைத்து காமெடி என்ற பெயரில் என்னமோ ட்ரை பண்ணி உள்ளனர். திருடனாக வரும் மொட்டை ராஜேந்திரனின் காமெடியும் சுத்தமாக எடுபடவில்லை. கிளைமாக்ஸ்க்கு முன்னதாக டிரம்மில் வைத்து உருட்டும் காட்சி மற்றும் நன்றாக இருந்தது. படத்தில் உள்ள எந்த ஒரு காட்சியும் நம்பத் தகுந்த அளவிற்கு இல்லை. அதிலும் கதாபாத்திரங்களில் மோசமான நடிப்பு மற்றும் திரைக்கதை எப்போதும் படம் முடியும் என்ற உணர்வையே தருகிறது.

கிராபிக்ஸ் காட்சிகள், எடிட்டிங், சிஜி என அனைத்து டிபார்ட்மெண்டுகளும் கடமைக்கு வேலை செய்தது போல் உள்ளது. கணவன் அடிபட்டு எந்திரிக்க முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் பொழுது மனைவி மற்றும் குழந்தை ஜாலியாக சாப்பிங் போவது போல் இடம் பெற்றும் காட்சிகள் எல்லாம் பிரமாதம். மாநாடு கதையை தேர்ந்தெடுத்து நடித்த எஸ்.ஜே.சூர்யாவா இதில் நடித்திருக்கிறார் என்ற கேள்வியே படம் முடிந்து வெளியில் வரும் போது ஏற்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்