Wednesday, March 27, 2024 4:59 am

ஃப்ஹத் பாசில் நடித்த ‘மலையான்குஞ்சு’ படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அனிகுட்டன் (ஃபஹத் ஃபாசில்), தொழிலில் எலக்ட்ரீஷியன், தனது தாயார் சாந்தா (ஜெய குருப்) உடன் வயநாடுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரது தந்தை ராதாகிருஷ்ணன் (ஜாஃபர் இடுக்கி) தனது மகள் திருமண நாளன்று ஓடிவிட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.

ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான மலையான்குஞ்சு படம் ஓடிடி தளத்தில் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. ஹீரோ மழைக்காரணமாக மண் சரிவில் சிக்கி உயிருக்கு போராடுவதே பிரதான கதை.

ஃபஹத் பாசில் தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தி கோலிவுட், டோலிவுட்டிலும் வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு பின் ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மலையான்குஞ்சு. இதிலும் அவர் குழந்தையை காப்பாற்றும் காட்சியை உருக்கமாக அமைத்துள்ளனர்.

நடிகர் ஃபஹத் பாசில் காதலுக்கு மரியாதை, வருஷம் 16 போன்ற தமிழில் பிரபலமான படங்களை இயக்கிய இயக்குநர் பாசிலின் மகன். மலையாளத்தில் பிரபல இயக்குநராக இருப்பவர் பாசில். ஃபஹத் பாசில் அமெரிக்காவில் பட்டம் படித்தவர். 2002 ஆம் ஆண்டு தந்தை பாசில் இயக்கத்தில் ‘கைதியின் தூரத்து’ படம் மூலம் அறிமுகமானார். ஆனால் படம் ஓடாததால் தனது தோல்வியை பெரும் இயக்குநரான தந்தை மீது சுமத்த விரும்பவில்லை என அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டுமுதல் நடிக்க தொடங்கியவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். கும்பளாங்கி நைட்ஸ், டிரான்ஸ், ‘தொண்டிமுத்தலும் திரிஷ்யயும்’ (தேசிய விருது பெற்றுத்தந்த படம்) தமிழில் விக்ரம், தெலுங்கில் புஷ்பா என கலக்கத்தொடங்கிவிட்டார். கண்ணாலேயே நடிக்கக்கூடியவர் என பெயர் எடுத்தவர் ஃபஹத் பாசில். அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான மலையான்குஞ்சு நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ரேடியோ, டிவி, லேப்டாப் என எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியராக இருக்கும் ஃபஹத் பாசில் தாயாருடன் தோட்டம், ரப்பர் மரங்கள், மலைசூழ்ந்த அழகான வீட்டில் வசிக்கிறார். அதிகாலையில் எழுவது, வீட்டிலேயே இருக்கும் தனி அறையில் எலக்ட்ரானிக்ஸ் வேலைகள் பார்ப்பது, வெளியில் சென்று பொருட்கள் வாங்குவது, வெளி வேலைகள் செய்வது என அவரது உலகம் சிறியது. தனது தங்கை மணநாள் அன்று தாழ்ந்த ஜாதி இளைஞருடன் ஓடிச் சென்று திருமணம் செய்ததால் உண்டான விரக்தியில் தந்தையும் தற்கொலை செய்துக்கொள்ள அதனால் ஃபஹத்பாசில் இறுக்கமானவராக மாறிவிடுகிறார்.

எப்போதாவது தாயாருடன் அன்பாக பேசுவது மற்ற நேரங்களில் எரிந்துவிழுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை இரவு முழுவதும் அழுவதால் ஃபஹத் கடுப்படைகிறார். பதிலுக்கு அவர்களிடம் சண்டை போடுகிறார், ஆம்ப்ளிஃபையரில் பதிலுக்கு சத்தமாக பாட்டு போடுகிறார். ஆனால் அவரது தாயார் பக்கத்து வீட்டாருடன் அன்பாக பழகுகிறார். ஒருநாள் டீக்கடை ஒன்றில் சந்திக்கும் குழந்தையின் தந்தை அவரது அண்ணன் இதுபற்றி கேட்க சண்டை முற்றி போலீஸ் ஸ்டேஷனில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.

அங்கு அவரது உறவினர் ஃபஹத் பாசில் நல்லவர்தான், அவர் தங்கை செய்த காரியமும், தந்தையின் தற்கொலையும் அவரை இப்படி முரட்டுத்தனமானவனாக மாற்றிவிட்டது என சமாதானம் சொல்கிறார். தொடர்ந்து குழந்தை விவகாரத்தில் பக்கத்துவீட்டுக்கு தொல்லை கொடுத்தால் போக்சோ சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என அதிகாரி எச்சரித்து அனுப்பி விடுகிறார். இதற்கிடையே வேலை செய்யப்போன இடத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கை அவரிடம் சமாதானம் பேச தந்தையின் தற்கொலையை நான் இன்னும் மறக்கவில்லை என திட்டிவிட்டு வந்துவிடுகிறார்.

ஒருநாள் தாயார் தங்கை கூப்பிடுகிறாள் 2 நாள் போய்விட்டு வரட்டுமா எனக்கேட்க இந்த வீட்டை விற்றுவிட்டு ஒரேடியாக போய்விடு நானும் எங்காவது போய்விடுகிறேன் என தாயாரை திட்டுகிறார் ஃபஹத் பாசில். தாயார் மவுனமாக போய்விடுகிறார். இதற்கிடையே பக்கத்து வீட்டுக்காரர் தனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு வருமாறு ஃபஹத்தை அழைக்க நல்ல மூடுடன் இருக்கும் அவர் தாயாருடன் வருகிறேன் என்கிறார். மறுநாள் கடும் மழையிலும் அவர்கள் வீட்டு விழாவிற்கு போகிறார் ஃபஹத். அங்கு மின்சாரம் தடைபட தானே இறங்கி உதவுகிறார்.

குழந்தைக்கு பொன்னி என பெயர் வைக்கிறார்கள், குழந்தையை பார்க்க போகும் அவர் அதன் கையில் தனது தாயார் அரை பவுன் தங்க வளையலை பரிசாக போட்டிருப்பதைப்பார்த்து கோபத்துடன் வீட்டுக்கு திரும்புகிறார். அவரை தாயார் சமாதானப்படுத்துகிறார். அடைமழை குறித்து அரசு எச்சரிக்கை விடுக்கிறது, அன்று இரவு பக்கத்து வீட்டுக்காரர் மழை எச்சரிக்கை காரணமாக தான் வேறொரு இடத்திற்கு போவதாகவும் , உங்கள் தாயாரையும் பாதுகாப்பாக இருக்க எங்களுடன் அனுப்புங்கள் என கேட்கிறார். ஆனால் என் தாயாரைப்பார்த்துக்கொள்ள எனக்குத்தெரியும் என திட்டி அனுப்பி விடுகிறார். அன்று இரவு திடீரென கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடு மண்ணில் புதைய ஃபஹத் அதில் சிக்கிக் கொள்கிறார்.

குழந்தையை ஃபஹத் காப்பாற்றுகிறாரா?குழந்தை அவரை காப்பாற்றுகிறதா?

அதிலிருந்து மீள அவர் நடத்தும் போராட்டமே மீதிக்கதை. போராட்ட நேரத்தில் காயம்பட்டு வெளி உலகம் தெரியாமல் அலைபாயும் ஃபஹத் கனவில் தனது தந்தை காப்பாற்றி விட்டு ஜாதி பார்க்காதே செத்த பின் அனைவரும் ஒன்றுதான் என்று சொல்லி செல்வதை கேட்கிறார். எந்த குழந்தையை வெறுத்தாரோ அந்த குழந்தை மூலம் ஃபஹத் காப்பாற்றப்படுவதுதான் மீதிக்கதை. மிக அழகாக இதை காட்சிப்படுத்தி கடைசி காட்சியில் ஃபஹத்துடன் சேர்த்து நம்மையும் உருக வைக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான் எங்கேயும்தொல்லை கொடுக்காமல் மெல்லிய இசையாக படம் முழுவதும் இளையோடுகிறது.

ஃபஹத் பாசில் உள்ளிட்ட சில பாத்திரங்களே கதையில் உள்ளனர். ஃபஹத்தின் தாயாராக நடித்திருப்பவர் மகனின் முரட்டுத்தனத்தை சகித்துக்கொண்டு போகும் ஒரு தாயாக நன்றாக நடித்துள்ளார். ஃபஹத் பாசிலின் நல்ல குணங்களை அவ்வப்போது காட்சிகள் மூலம் வைத்து இயக்குநர் சஜ்மோன் பிரபாகர் தன் முத்திரையை பதித்துள்ளார். மலைச்சரிவில் வீடு உடைந்து ஃபஹத் சிக்கிக்கொள்ளும் காட்சிகளில் கலை இயக்குநரின் வேலை தெரிகிறது. அழகாக படமாக்கியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலை ஒரு மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணத்தை வெளிக்கொண்டு வரும் என்பது மைக்கரு அழகாக சொல்லப்பட்டுள்ளது. ஃப்ஹத் சொல்லவே வேண்டாம் அழகாக அவருக்கான பாத்திரத்தை செய்துள்ளார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பகுதிகளை அழகாக கையாண்டனர், அனிகுட்டனின் மாமாவாக சுரேந்திரனாக இந்திரன்ஸ், அனிகுட்டனின் தங்கையாக ரஜிஷா விஜயன் மற்றும் அனிகுட்டனின் தங்கையாக ரஜிஷா விஜயன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் வழங்கினர். சஜிமோனின் இயக்கம் அருமை, மேலும் அவர் தனது நடிகர்களுடன் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

ஃபஹத் நடிப்பில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்