Friday, April 26, 2024 11:17 pm

ஜெய் நடித்த ஆக்‌ஷன் படமான எண்ணித்துணிக படத்தின் விமர்சனம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேப்மாரி படத்தில் ஜெய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்ட அதுல்யா ரவி, இந்தப் படத்தில் மீண்டும் நடிகருடன் கைகோர்க்கிறார். ரெயின் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப்படும் இப்படத்தில் வைபவின் சகோதரர் சுனில் ரெட்டி மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோரும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளனர். படத்தின் பாடல் காட்சிகளுக்காக சென்னை, மதுரை மற்றும் வடகிழக்கில் மேகாலயா போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்து 15 வருடங்கள் போராட்டத்துக்கு பிறகு இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் எஸ்.கே. வெற்றிச்செல்வன். எண்ணித்துணிக என்ற தனது முதல் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கியிருக்கிறார்.நகைக்கடையில் நடக்கும் கொள்ளையால் பாதிக்கப்படும் சாமானியன் எண்ணித்துணிந்து என்ன செய்கிறான் என்பதை சுவாரசியம் குறையாமல் கூறியிருக்கிறார் வெற்றிச்செல்வன். காதல், காமெடி என வலம் வந்த ஜெய் இந்தப் படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். எடுத்திருக்கும் அவதாரம் அவருக்கு பொருந்தியும்போவது ப்ளஸ். அதேசமயம் ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து பல காட்சிகளில் பழைய ஜெய்யே தெரிகிறார். அதுல்யாவை பொறுத்தவரை தனக்கான கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்கிறார்.

கதை சாதாரண கதைதான் என்றாலும் அதை காப்பாற்றுவது திரைக்கதைதான். ஒவ்வொரு போர்ஷனாக படம் விரிந்தாலும் இயக்குநர் அதை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார். ஆனால், ஆக்‌ஷன் காட்சிகள் மனதில் பதியும் அளவு காதல் காட்சிகள் அவ்வளவாக பதியவில்லை. ஜெய், அதுல்யா இருவருக்குமான காதல் போர்ஷனில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

வில்லனாக வம்சியும், சுரேஷ் சுப்ரமணியனும் நடித்திருக்கிறார்கள். வம்சி வழக்கம்போல் தன் நடிப்பில் மிரட்ட மற்றொரு வில்லன் சுரேஷ் சுப்ரமணியனுக்கு அவ்வளவாக பெரிய வேலையில்லை என்றே தோன்றுகிறது. ‘அவ இல்லத்தரசி நீ இதயத்தரசி’, ‘இப்டிலாம் பண்ணா பிக்பாஸுக்கு கூப்டுவாங்கனு நினைப்பு’, ‘நகையை பிடிக்க சொன்னா புகையை பிடிச்சிருக்கிங்க இதுதான் புகை போட்டு பிடிக்கிறதா’ போன்ற வசனங்கள் கலகலப்பு ஏற்படுத்துகின்றன. சாதி குறித்த ஒரு கேள்விக்கு ஜெய் அளிக்கும் பதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒன்றில் ஆரம்பித்து அடுத்த விஷயத்துக்கு சென்று மீண்டும் மற்றொரு விஷயத்த்தை தொட்டு அனைத்து விஷயங்களையும் இணைக்கும் திரைக்கதைக்கு எடிட்டிங் சிறப்பாக அமைவது மிக மிக அவசியம். அதை கனகச்சிதமாக செய்திருக்கிறார் எடிட்டர் சாபு ஜோசப். அதேபோல் படத்துக்கு மிகப்பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை.

மனிதர், பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சாம் சிஎஸ்ஸின் இசை அல்டிமேட் ரகம். படத்தில் பாடல்கள் குறைவுதான் என்றாலும் இருக்கும் இரண்டு பாடல்களும் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்கின்றன. குறிப்பாக, என்னடியே என்னடியே பாடல். கார்த்திக் நேத்தா எழுதியிருக்கும் அந்தப் பாடலில் பல வரிகள் கவனம் கொள்ள வைக்கின்றன. வரிகளை ரசிப்பதா, இசையை ரசிப்பதா என குழம்பும் அளவுக்கு அந்தப் பாடல் இருக்கிறது.

அந்தப் பாடலின் மேக்கிங்கில் வெற்றிச்செல்வன், தான் வசந்த் பட்டறையிலிருந்து வந்தவன் என்பதை உணர்த்தியிருக்கிறார். மேக்கிங்கில் அவ்வளவு கூல். முக்கியமாக சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதை கோலிவுட்டுக்கு நீண்ட நாள்களுக்கு பிறகு நினைவுப்படுத்தியிருக்கிறார் வெற்றிச்செல்வன். வாழ்த்துகளும், நன்றிகளும்.

த்ரில்லர் பாணியில் ஆரம்பிக்கும் கதை அதே வேகத்தில் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க திடீரென காதல் காட்சிகள் உள்ளே வருவது முதல் பாதியில் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியை எழுப்பி முதல் பாதியை முடித்தது ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோர்வை நீக்கி ஆவலை எழுப்புகிறது. இரண்டாம் பாதியில் இருக்கும் திரைக்கதை பல முடிச்சுகளை அவிழ்க்கின்றன. அவிழும் முடிச்சுக்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன. பக்காவான திரைக்கதையோடு களமிறங்கிய வெற்றிச்செல்வன் படத்தின் நீளத்தை கொஞ்சம் கத்தரித்திருக்கலாம் என்ற நினைப்பு எழுகிறது.

க்ளாஸ் இயக்குநர் வசந்த்திடமிருந்து வந்திருந்தாலும் வெற்றிச்செல்வன் கமர்ஷியலை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதேபோல், இதுபோன்ற கமர்ஷியல் கதைக்கு திருக்குறளான ‘எண்ணித்துணிக’ என தலைப்பு வைத்ததும் அழகு. அனைத்தையும் மறந்து ஒரு ஜனரஞ்சகமான படத்தை ரசிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் துணிந்து எண்ணித்துணிக படத்துக்கு சென்று வரலாம்.

மதன் மற்றும் கும்பலின் கொள்ளை தவறாக நடக்கும்போது, ​​கொள்ளையடித்ததை தனது மேலிடத்திற்கு வழங்க வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகிறான். கதிர் தோன்றும்போது விஷயங்கள் சிக்கலாகத் தொடங்குகின்றன, இறுதியாக அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்