Sunday, April 2, 2023

பொதுவாக பெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! முழு விவரங்கள் இதோ!

தொடர்புடைய கதைகள்

வெரிகோஸ் வெயின் தொடர்பான தோல் மாற்றங்களை எளிய முறையில் சரிசெய்வது எப்படி!

கால்கள் இயற்கையாகவே உங்கள் நரம்புகளால் பச்சை குத்தப்பட்டால், அது கவலைக்குரிய விஷயம்....

உங்கள் மூளை சக்தியை அதிகரிக்க இத ட்ரை பண்ணுங்க

நீங்கள் மறதியாக உணர்கிறீர்களா அல்லது கவனம் செலுத்த சிரமப்படுகிறீர்களா? உங்கள் உணவுமுறை...

கால்-கை வலிப்பு ஆரம்பகால மரண அபாயத்தை அதிகரிக்கலாம் ஆய்வு அறிக்கை

ஊதா தினத்திற்கு முன்னதாக ஒரு புதிய ஆய்வின்படி, கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு...

உங்க தலையில் கொத்து கொத்தாக தலை முடி கொட்டுகிறதா ? அப்ப இது உங்களுக்கு தான்

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா கவலை வேண்டாம்! சிறிய வெங்காயம் இருந்தால்...

பெண்களின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. மேலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், கருப்பை புற்றுநோய் மற்றும் பிறப்புறுப்பு நோய்கள் இவைகள் வராமல் தடுக்க முடியும். மேலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெண்களின் எலும்பு பலவீனம் அடைகிறது. அதற்கு அவர்களுக்கு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய், இதய நோய்களை குணப்படுத்தவும் , நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பாதுகாக்கவும் உணவு என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது.

மேலும் ஆய்வுகளின் படி பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பொழுது தான் பெண்கள் அவர்களுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை எதிர்த்து போராட முடியும்.

தக்காளி என்பது பெண்களின் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அதனால் தக்காளி பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய், எண்ட்டோமெட்ரியல் புற்றுநோய், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காக்கிறது.

​வால்நட்ஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதனால் 8 வாரங்களுக்கு இரண்டு அவுன்ஸ் வால் நட்ஸை சாப்பிட்டு வருவது இதயத்திற்கு மிக ஆரோக்கியமானது. மேலும் இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மார்பக புற்று நோய் வளர்ச்சியை மெதுவாக்கும். கரோனரி இதய நோய்களை தடுக்க வால்நட்ஸ் உதவுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​வாழைப்பழம் உண்பதன் மூலம் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில்லிருந்து காக்கிறது.

கீரை போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்வது மூலம் ஒவ்வாமை, கர்ப்பகால நீரிழிவு, பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் மற்றும் அதிக எடை அதிகரிப்பது போன்ற பெண்களுக்கு வரும் நோய்களை தடுக்க உதவுகிறது.மேலும் இந்த உணவில் சல்போக்வினோவோஸ் உள்ளது, இது குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இவ்வாறு ஆரோக்கிய உணவை எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகள் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக வாழலாம் எனவும் மருத்துவர்கள் வருகின்றார்கள்.

சமீபத்திய கதைகள்