உண்மையிலேயே மீனை பாலுடன் சேர்த்து சாப்பிடால் இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்துமாம்.. உஷார் மக்களே !!

0
உண்மையிலேயே மீனை பாலுடன் சேர்த்து சாப்பிடால் இவ்வளவு பிரச்சினையை ஏற்படுத்துமாம்.. உஷார் மக்களே !!

பொதுவாக ஒரு சில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது என்று நமது பெரியவர்கள் கூறுவதுண்டு.

உணவின் தன்மைகள் ஒன்றோடொன்று முரண்படுவதால், உணவு விஷமாகும் ஆபத்து உள்ளது. எனவே, சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து சாப்பிடக் கூடாது

அதில் முக்கியமானது, மீன் மற்றும் பால்.. இவை இரண்டையுமே சேர்த்து உண்பது உடலுக்கு தீமை விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.

உண்மையில் பாலை மீனுடன் சேர்த்து சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம். பால் என்பது குளிர்ச்சி தன்மை கொண்ட உணவாகும். மீன் என்பது உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவாகவும் கூறப்படுகிறது. எனவே இரண்டு எதிரெதிர் குணங்களை உணவுகளை சாப்பிடக்கூடாது.

மீன், பால் இரண்டையும் உட்கொள்வது இரத்தத்தில் ஒரு வேதியியல் எதிர்வினையை ஏற்படுத்துகிறது. இது தோல் நிறமி அல்லது லுகோடெர்மா என்னும் நோய்க்கு வழி வகுக்கும்.

பொதுவாக இந்த இரண்டு உணவுகளுமே புரதம் நிறைந்ததாகும். ஒரே நேரத்தில் இரண்டு புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள். எனவே அவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. எனவே ஜீரண சக்தி உள்ளவர்களுக்கு இது பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக பாதிக்கிறது.

No posts to display