ஆசை காட்டி ஏமாற்றிய சிம்பு! முன்னாள் காதலனால் அதள பாதாளத்தில் நடிகை ஹன்சிகா

0
ஆசை காட்டி ஏமாற்றிய சிம்பு! முன்னாள் காதலனால் அதள பாதாளத்தில் நடிகை ஹன்சிகா

ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான ‘மஹா’ இன்று ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா, சிம்பு, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, மஹத் ராகவேந்திரா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹன்சிகாவை காதலித்து பிரிந்த நடிகர் சிம்பு இப்படத்தில் ஹன்சிகாவுக்கு ஜோடியாக 40 நிமிடங்கள் நடித்துள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. தந்தை டி ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாததால் வெளிநாட்டில் இருந்த சிம்பு அப்போது அந்நிகழ்ச்சி வரமுடியாமல் போனது.

இந்நிலையில் 40 நிமிடம் படத்தில் சிம்பு வருவார் என்று எதிர்ப்பார்த்திருந்தால் படத்தில் முதல் பாதியில் 10 நிமிடமும் இரண்டாம் பாதியில் 10 நிமிடம் மட்டுமே தான் சிம்பு காட்சி இருந்துள்ளதாம். ராட்சசன் படத்தினை போல் ஹிட் அடிக்கும் என்று பார்த்தால் சற்று தொய்வுகளின் காரணமாக ரசிகர்கள் கவர தவறவிட்டுள்ளதாம்.

சிம்பு, ஹன்சிகாவின் குழந்தையை சைக்கோ கில்லர் கடத்தி விடுவதும். அதை எப்படி போராடி தன் குழந்தையை காப்பாற்றுகிறார் என்ற கதை கருவாக அமைந்துள்ளது. ஹன்சிகாவின் 50 வது படமாக அமைந்த மஹா படம்இதனால் ரசிகர்கள் மத்தியில் சிம்பு காட்சியில் ஹன்சிகாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம்.

No posts to display