இணையத்தில் செம்ம வைரலாகும் ஏகே 61 படத்தின் மிரட்டலான பைக் சேஷங் வீடியோ !! நீங்களே பாருங்க

0
இணையத்தில் செம்ம வைரலாகும் ஏகே 61 படத்தின் மிரட்டலான  பைக் சேஷங் வீடியோ !! நீங்களே பாருங்க

‘ஏகே 61’ என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் மற்றும் வீரா மற்றும் அவர்கள் ‘ஏகே 61’ படத்தின் புனே ஷெட்யூலின் ஒரு பகுதியாக இருப்பார்கள். புனே ஷெட்யூலுக்குப் பிறகு முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இறுதி அட்டவணைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முன்னணி நட்சத்திரமான அஜித் ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்ததால், புனே அட்டவணை உருளுவதற்கு சிறிது நேரம் எடுத்தது, மேலும் ஸ்டைலான நடிகர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஒரு உணவகத்தில் இரவு உணவை அனுபவித்தார்

லண்டன், பாரீஸ் என ஐரோப்பா முழுவதும் பைக் டூர் அடித்து வந்த நடிகர் அஜித் மீண்டும் ஏகே 61 செட்டிற்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Ak fans

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், சில காட்சிகள் லீக் ஆகி உள்ளன.

ஏகே 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென அங்கே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, நடிகர் அஜித் ஐரோப்பாவிற்கு பைக் டூர் கிளம்பினார். அங்கே ரசிகர்களை சந்தித்த புகைப்படங்களையும், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வீடியோக்களும், லண்டன் கடை ஒன்றில் பெண் ஒருவருக்காக வழி விட்ட வீடியோ என ஏகப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி டிரெண்டாகினன்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடித்து வரும் ஏகே 61 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற உள்ள தகவல் முன்னதாக கசிந்திருந்த நிலையில், தற்போது அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்து இருக்கிறார் இயக்குநர் ஹெச். வினோத். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், புனே பாலத்தின் மீது இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் அவரது டீம் நடத்தி வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் சென்னையில், நடைபெற்ற நிலையில், கசிந்தன. அதன் காரணமாகவே தற்போது புனேவுக்கு ஷூட்டிங்கை இயக்குநர் மாற்றி இருந்தார். ஆனால், அங்கே இருந்தும் இப்படி போட்டோக்களும், வீடியோக்களும் லீக் ஆவது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அஜித் ஒரு பைக் விரும்பி என்பது அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். வலிமை படத்தையே அதற்காகவே டிசைன் செய்து படமாக்கி இருந்தார் இயக்குநர் ஹெச். வினோத். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், பைக் காட்சிகள் பாராட்டுக்களை அள்ளின. இந்நிலையில், ஏகே 61 படத்திலும் பாலத்தின் மீது பைக்கர்கள் எட்டிப் பார்க்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக வெளியான வீடியோக்கள் மூலம் கதை சொல்லி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

ஜூலை மாதமே மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்புகள் மின்னல் வேகத்தில் முடிக்கப்பட்டால், அறிவித்தபடியே வரும் தீபாவளிக்கு ஏகே 61 படம் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். ரசிகர்களுக்கு உரிய நேரத்தில் வெயிட்டான படத்தை கொடுக்கவே அஜித்தும் அவரது டீமும் உழைத்து வருகின்றனர். படத்தை பொறுமையா ரிலீஸ் பண்ணுங்க, முதலில் ஒரு அப்டேட்டை கொடுங்க என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No posts to display