கட்டா குஸ்தி’ படத்தில் கொஞ்சம் வித்தியாசமான முதலிரவு சீன் இடம்பெறும் இயக்குனர் கூறிய உண்மை !!

0
கட்டா குஸ்தி’  படத்தில் கொஞ்சம் வித்தியாசமான முதலிரவு சீன் இடம்பெறும் இயக்குனர் கூறிய உண்மை   !!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது ’கட்டா குஸ்தி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ’சிலுக்குவார் பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெறும் முதலிரவு காட்சி படமாக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளாக இந்த காட்சியில் நடித்தனர். அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டில் மெத்தை செட்டில் விஷ்ணு விஷாலுக்கு முதல் இரவு அறையில் ஐஸ்வர்யா லட்சுமி பால் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து விஷ்ணு விஷால் கூறிய போது ’இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ முதலிரவு காட்சிகள் இருந்தாலும் இது முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட ஒரு முதலிரவு காட்சி என்றும் பார்வையாளர்களுக்கு இந்த காட்சி வித்யாசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், ரெடின் கின்ங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

No posts to display