இயக்குனர் மணிரத்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதி !!

0
இயக்குனர் மணிரத்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதி !!

இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரானா தொற்று உறதியாகியுள்ளதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்டி வதைத்து வந்த கொரோனா தொற்று மீண்டும் நம்மை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தத் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்புடன் இருந்த போதிலும் பிரபலங்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனரான மணிரத்னம், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரானா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செய்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவரின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். லேசான கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மணிரத்னத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகளில் மணிரத்னம் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display