கணவர் செய்த வேலையால் மொத்த பணமும் போச்சே பதட்டத்தில் நம்பர் நடிகை !!

0
கணவர் செய்த வேலையால் மொத்த பணமும் போச்சே பதட்டத்தில் நம்பர் நடிகை !!

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த மாதம் கோலாகலமாக தங்கள் திருமணத்தை செய்து கொண்டனர். இதில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி என எக்கசக்கமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தவிர ஏனைய புகைப்படங்கள் குறிப்பாக பிரபலங்களின் புகைப்படங்கள் அப்போது வெளியாகவில்லை.

இதன் பின்னணி விசாரித்தால், திருமண நிகழ்ச்சியை மொத்தமாக வீடியோவாக பதிவிட்டு, அதனை பிரபல OTT நிறுவனமான நெட்பிளிக்ஸ் தளத்திற்கு அளிப்பதாக இருவரும் ஒப்பந்தம் செய்து இருந்தனராம்.

அந்த வீடியோக்களை எடுக்கும் பொறுப்பு இயக்குனர் கௌதம் வாசித்தேன் மேனன் அவர்களிடம் இருந்ததாம். இந்த சமயம் அண்மையில் விக்னேஷ் சிவன் சில திருமண புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் உடன் ஷாருக்கான், ரஜினிகாந்த், இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இது அந்த OTT நிறுவனத்தை கோவப்படுத்தி உள்ளது.

ஒப்பந்தத்தின் படி இவ்வாறு புகைப்படங்களை அனுமதி இன்றி வெளியிடக்கூடாது. அதனை மீறி விட்டதால், ஒப்பந்தம் செய்ய ரத்து செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். விக்னேஷ் சிவன் செய்த செயலால் தற்போது OTT உரிமைக்கான மொத்த பணமும் இப்படி போவிடுமோ என்று பதட்டத்தில் நயன்தாரா இருக்கிறாராம்.

No posts to display