ஏன் டீ ஒரு படத்துல நடிச்சா நீ பெரிய இவளா.? பவி டீச்சரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. நீங்களே பாருங்க

0
ஏன் டீ ஒரு படத்துல நடிச்சா நீ பெரிய இவளா.? பவி டீச்சரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..  நீங்களே பாருங்க

வித்தியாசமான முயற்சிகளை தமிழ் சினிமாவில் தொடர்ந்து செய்து வரும் இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவர்கள் படைப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தின் பார்த்திபன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவருக்கு மனைவியாக பிரிஜிடா எனும் அறிமுக நடிகை நடித்துள்ளார்.

கதைப்படி ஒரு மனிதனின் குழந்தை பருவத்திலிருந்து அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் மனிதர்கள், அவனை பாதித்த சம்பவங்கள் இதனை மனதில் வைத்து கதை திரைகதை அமைத்து அதனை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார் இயக்குனர் பார்த்திபன்.

இதில் இளம் வயது பார்த்திபனுக்கு மனைவியாக பிரிஜடா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே இணையத்தில் வெளியான ஒரு வெப் சீரிஸில் பவி டீச்சராக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

இவர் அண்மையில் இரவின் நிழல் படம் பார்த்து விட்டு வெளியே வந்த போது, ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அப்போது அவர் ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க கெட்ட விஷயங்களை பார்க்கிறான். அதனால் அவனுடைய வாழ்வு எப்படி இருக்கும் என்பது காட்டப்பட்டுள்ளது. சேரியில் பிறந்த மனிதன், சேரியில் எப்படி எல்லாரும் பேசுவார்கள் என்று நமக்கு தெரியும். சேரியில் கெட்ட வார்த்தை பேசுவார்கள். அதனால் இந்த படத்தில் இப்படியிருக்கிறது எனபது போல பேசியுள்ளார்.

இது பலரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் பவி டீச்சரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

நீங்கள் நடித்ததே ஒரு திரைப்படம், அதில் நடித்திவிட்டு இப்படி பேசுவதா? சேரி மக்கள் என்றால் யார் என்று தெரியுமா? என்று திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டனர். ஒரு சிலர், ‘ தவறாக பேசியதற்காக அவரை கைது செய்ய வேண்டும்.’ என்றெல்லாம் கமெண்ட் அடிக்க தொடங்கி விட்டனர்.

பிரச்சனை பெரிதாவதற்குள் பவி டீச்சர் இன்னொரு வீடியோவில் தான் தவறாக பேசி விட்டேன் என்று வீடியோ வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

No posts to display