மீண்டும் ஐஸ்வர்யா தனுஷ் இடையே வெடித்த புதிய பிரச்சனை !! கடுப்பில் லதா ரஜினிகாந்த் !!

0
மீண்டும் ஐஸ்வர்யா தனுஷ் இடையே வெடித்த புதிய பிரச்சனை !! கடுப்பில் லதா ரஜினிகாந்த் !!

தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக நிலவி வரும் பிரச்சனைகளால் பிரிந்ததாக ஜனவரி 17ம் தேதி நள்ளிரவில் அறிவித்தனர். ஆந்திராவில் உள்ள ஒரே ஹோட்டலில் இருந்து இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனர். பின்னர் தனித்தனியாக வசித்து வந்தனர்.

ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிந்த பின்பு இருவரும் சினிமாவில் பிசியானார்கள்.இரண்டு குழந்தைகளையும் தனுஷ் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளியில் அழைத்து சென்று மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் வெளியானது, அதே போன்று ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தனுஷ்க்கு போட்டியாக தன்னுடைய குழந்தைகள் உடன் ஐஸ்வர்யா இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தன்னிடம் தான் குழந்தைகள் பாசமாக இருப்பது போன்று காட்டிகொண்டார்.

இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும், யாரும் சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு நீதிமன்றம் செல்ல முன் வரவில்லை, இதனால் இவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது என கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு பிரட்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வந்த நடிகர் தனுஷ், மீண்டும் மனைவியுடன் இணைய முயற்சி செய்து வந்தார். இந்த சூழலில், திருசிற்றம்பலம் படத்தில் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து பணியாற்றினார் அனிரூத்.

அனிரூத் உதவியுடன் மீண்டும் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைய நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், இருவரும் மீண்டும் பேச தொடங்கியவர்கள், பிரிவதற்கு முன்பு சென்னை ஆரியபுரத்தில் வசித்த வீட்டிற்கு இருவரும் அடிக்கடி வந்து தங்கிவிட்டு செல்வதாக தகவல் வெளியானது.

aishwariya dhanush

இதனால் மீண்டும் ரகசியமாக இணைந்து குடும்பம் நடத்தி வரும் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வருகிற ஜூன் 28 தனுஷ் பிறந்த தினத்தில் அதிகார்பூர்வமாக இணைத்துள்ளது குறித்து அறிவிப்பு வெளியிடலாம் என தகவல் வெளியானது.

இந்த சூழலில் அடிக்கடி ரகசியமாக சென்னை ஆரியபுரம் வீட்டிற்கு வந்து செல்லும் தனுஷ் -ஐஸ்வர்யா இடையே மீண்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வெடித்துள்ளது என்றும், இதன் காரணமாக ஆரியபுரம் வீட்டிலே இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சமீப காலமாக இவர்கள் அங்கே வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் மீண்டும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷ் -ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைய இருப்பதை அறிந்து, இரண்டு குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில், மீண்டும் இருவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளது, இரண்டு குடுமபத்தினரையும் கவலை அடைய செய்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.

No posts to display