அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்!

0
அடிதடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான சந்தானம்!

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் சந்தானம் நேற்று பூந்தமல்லி நடுவர் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரானார். 2017 ஆம் ஆண்டுவாக்கில் சந்தானம் கட்டிட காண்ட்ராக்டர் ஒருவரிடம் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை திருப்பிப் பெறும்போது இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்து அது அடிதடி வரை சென்றது. அப்போது அந்த பிரச்சனை சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது சம்மந்தமாக சந்தானம் மற்றும் அந்த காண்ட்ராக்டர் ஆகிய இருவருமே வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் நேற்று நேரில் ஆஜராகியுள்ளார் சந்தானம். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

No posts to display