Friday, April 26, 2024 9:47 am

உன் சவகாசமே வேண்டாம் விஜய் முகத்தில் அடித்தது போல் பேசிய மேனஜர் !!! நடந்து என்ன !! கடுப்பில் விஜய்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வரிசு’ அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் வெளியிடப்பட்டன, மேலும் மூன்று வெவ்வேறு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது, அதே சமயம் ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடங்களில் பல பிரபல நட்சத்திரங்களுடன் முன்னணி பெண்ணாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ரஜினிக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் இருந்து வருகிறார், சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், சினிமா தவிர்த்து அரசியல் சார்ந்த சில விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைத்து கொண்டு எதிர்ப்பை சம்பாரித்து கொள்கின்றவர். முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தலைவா படத்தில் சர்ச்சை கூறிய வகையில் வாசகம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டார் விஜய்.

இதனால் அந்த படம் வெளியவதில் சிக்கல் ஏற்பட்டு, கை கட்டி அம்மா, நீங்க தான் எங்களை காப்பாத்த வேண்டும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா சமாதானம் ஆகும் வகையில் வீடியோ வெளியிட்டு கெஞ்சி , கூத்தாடி ஒரு வழியாக தலைவா படம் வெளியானது. இதன் பின்பு அரசியல் விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் அமைதியாக இருந்து வந்த விஜய், ஜெயலலிதா மறைவுக்கு பின்பு மெல்ல தனது சேட்டையை காட்ட தொடங்கினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நடந்த அவரது திரைப்படத்தின் ஒவ்வொரு ஆடியோ வெளியிட்டு விழா மேடையில் அரசியல் பேச தொடங்கியவர், விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனகங்கள் அனைத்தும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக இருந்ததை தொடர்ந்து பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அந்த எதிர்ப்பை தனது படத்தின் விளம்பரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் விஜய்.

இதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான காட்சிகள், வில்லி கதாபாத்திரத்துக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என்கிற பெயரை வைத்திருந்தது அதிமுகவினர் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பி, சர்க்கார் படம் வெளியிடப்பட்ட திரையரங்குகள் சூறையாட பட்டது. மேலும் தொடர்ந்து மத்திய பாஜக அரசை சீண்டி வந்த நடிகர் விஜய்க்கு ஆப்பு வைக்கும் விதத்தில் தரமான சம்பவம் ஓன்று அரங்கேறியது.

மாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலியில் விஜய் இருக்க, சென்னையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையில் அதிரடி சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்வேலியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகளால் சென்னை அழைத்து வரப்பட்டு நடிகர் விஜய்யிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர், சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியமால் சிக்கி கொண்டார் விஜய் என கூறப்படுகிறது.

இதன் பின்பு மத்திய பாஜக அரசு பற்றி வாயே திறக்காமல் இதுவரை கப் சீப் என அமைதியாக இருந்து வருகிறார் விஜய், இதற்கு கரணம் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய சில முக்கிய ஆவணங்கள் தான் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் விஜய் மேனேஜராக இருந்து வந்த ராமு என்கிற நபரிடம் தொடர்ந்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். விசாரணைக்காக அடிக்கடி அழைக்கப்பட்டுள்ளார் ராமு.

ஒரு சில கேள்விகளுக்கு ராமு பதிலளித்துள்ளது, நடிகர் விஜய்க்கு மேலும் சிக்கலை ஏற்பாடுத்தியுள்ளது. இதனால் விஜய் – ராமு இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வருமான வரித்துறை விசாரணையின் போது கேள்வி மேல் கேள்வி கேட்டு கடும் டார்ச்சர் செய்துள்ளனர் வருமான வரித்துறையினர். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து எப்போது வேண்டுமானலும் விசாரணைக்கு ராமு அழைக்கப்படலாம் என்று விசாரணையின் போதே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான ராமு, நேரடியாக இந்த வேலையே வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போன்று விஜய்யிடம் தெரிவித்து விட்டு வேலையை விட்டு விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது விஜயிடம் மேனேஜராக இருந்த ராமு, நடிகர் விஷாலிடம் மேனேஜராக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்