ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !!‘AK 61’ படப்பிடிப்பில் எப்போது கலந்துகொள்ளுகிறார் அஜித் – வெளியான தகவல்

0
ஆட்டத்தை ஆரம்பித்த அஜித் !!‘AK 61’ படப்பிடிப்பில்  எப்போது  கலந்துகொள்ளுகிறார்  அஜித் – வெளியான தகவல்

அஜித் தற்போது ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் நாடுகளுக்கு மோட்டார்பைக்குகளில் சென்று வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில் H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் வினோத்.

இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியா திரும்ப உள்ள அஜித், மீண்டும் AK 61 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. பூனேவில் நடக்கும் இந்த இறுதிக்கட்டப் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டும் முடிய உள்ளதாக சொல்லப்படுகிறது.

No posts to display