Friday, April 19, 2024 11:15 pm

தியேட்டரை தொடர்ந்து ஒடிடி-யிலும் புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கமல்ஹாசன் நடித்து தயாரித்த விக்ரம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவான இப்படம் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பல புதிய சாதனைகளையும் நிகழ்த்தியது.

இந்த நிலையில், ஜூலை 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியான ‘விக்ரம்’ ஒடிடி தளத்திலும் மிகப்பெரிய ஓபனிங்கை பதிவு செய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான ’விக்ரம்’ தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.

நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில், “விக்ரம் மீது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பொழியும் அன்பும் பாசமும் இதயத்தை தொடுகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் விக்ரம் உருவாக்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை ஒவ்வொரு பார்வையாளர்களின் வீடுகளிலும் கைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு தேசிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இதுவரையிலான, சாதனைகளை இப்படம் முறியடித்து வருவது, கொண்டாட்ட தருணமாகும். ஒட்டுமொத்த விக்ரம் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

டிஸ்னி ஸ்டார், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் & HSM என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்கின் கண்டெண்ட் ஹெட் கௌரவ் பானர்ஜி கூறுகையில், “உலகெங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை வெற்றிக்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி, பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்

- Advertisement -

சமீபத்திய கதைகள்