இதுவரை யானை படம் வசூலித்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

0
இதுவரை யானை படம் வசூலித்த மொத்த  வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி 2 திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், அவரது இயக்கத்தில் தற்பொழுது வெளியாகிய திரைப்படம் யானை. இத்திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருந்தார். கதாநாயகியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.

இவர்களோடு சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், சஞ்சீவ், போஸ் வெங்கட், ராமச்சந்திர ராஜூ,யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

குடும்பம்,காதல் சென்டிமென்ட் கொண்ட திரைப்படத்தில் அருண் விஜய் கனகச்சிதமான நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை.. யார் யாரை பழிவாங்க போகிறார்கள்? என்ற வழக்கமான ஹரியின் கதை தான் யானை. இந்த கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்தும் சமமாக உள்ளது.

நாயகன் குடும்பம் சந்திக்கும் பிரச்னை ஜூலை 1ந் தேதி வெளியான திரைப்படத்தில் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு இருந்து வருவதால் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக்கொண்டு இருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் இப்படம் மொத்தமாக ரூ. 43.55 கோடி வரை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தமாக 10 நாட்களில் ரூ. 1. 26 கோடி வரை வசூலித்துள்ளது.வரும் நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் வரும் என்கின்றனர்.

No posts to display