விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘லைகர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கில் இணையதளத்தில் வைரல்!

0
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘லைகர்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கில் இணையதளத்தில் வைரல்!

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், பூரி ஜெகந் நாத் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லைகர்’. இப்படத்தில் பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்த்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி பலரை கவர்ந்து வந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்று வந்தது.

அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ‘லைகர்’ படத்தில் இடம்பெற்ற அகடி பகடி வீடியோ என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

No posts to display