பிரபல தமிழ் காமெடி நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..!

0
பிரபல தமிழ்  காமெடி நடிகர்  திடீர் மரணம்- அதிர்ச்சியில்  மூழ்கிய ரசிகர்கள்..!

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன்.

பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ்.

இதற்கிடையே தற்போது நடிகர் ராமராஜ் காலமானாதாக செய்தி ஒன்று வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இவர் கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் கடந்த சில தினங்களாக உடல்நிலை கொஞ்சம் மோசமடைந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதோடு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

No posts to display