நாடி நரம்பு புடைக்கும் அளவிற்கு AK 61 படத்தை பற்றிய படு மாஸ் அப்டேட் இதோ !! செம்ம பஞ்ச் தல

0
நாடி நரம்பு புடைக்கும் அளவிற்கு AK 61 படத்தை பற்றிய படு மாஸ் அப்டேட் இதோ !! செம்ம பஞ்ச்  தல

வலிமை’ படத்திற்குப் பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை வங்கி திருட்டு என கூறப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. அஜித் தனது ஐரோப்பா பயணத்திலிருந்து இந்தியா திரும்பிய பிறகு படக்குழுவினர் விரைவில் புனேயில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில் H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில் இப்போது அஜித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் H வினோத். முன்னதாக சென்னையின் பிரபல மால் ஒன்றில் ஷூட் நடந்தது. அதையடுத்து இப்போது காசிமேடு பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

எனினும் தற்போது அஜித் வினோத் இயக்கத்திலேயே தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பிற்கு இடைவேளை விட இப்போது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதுவரை வெளிநாட்டில் அஜித்தின் புகைப்படங்கள் மட்டும் வெளியாக தற்போது அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் வெளியாகிறது.

மேலும் அஜித் தனது மகனின் கையை பிடித்துக்கொண்டு நடக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் ‘AK61’ படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான்:

‘என்னை தோற்கடிக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான் டா முடிவு செய்யணும்’ என்பது தான் அந்த பஞ்ச் டயலாக். படிக்கும் போதே மாஸ் ஆக இருக்கும் இந்த டயலாக், அஜித் பேசும்போது திரையரங்கத்தில் கேட்டால், என்ன ஆகுமென்று, நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை..!

No posts to display