எதிர்பார்ப்புகளை எகிற வைத்த AK61படத்தின் புதிய அப்டேட் மிரளும் திரையுலகம் !!

0
எதிர்பார்ப்புகளை எகிற வைத்த AK61படத்தின் புதிய அப்டேட் மிரளும் திரையுலகம் !!

அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் எச் வினோத் AK 61 படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் பிடித்தபடி கொடுக்க வேண்டுமென விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

AK 61 படத்தில் தல அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அஜித் படத்தின் கிளைமாக்ஸுருக்கு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதால், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதனால் இந்த இடைவெளியில் தல அஜித் வெளிநாட்டில் பைக்கில் சுற்றி வருகிறார்.

அந்த பயணத்தை முடித்த பிறகு AK 61 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இணைவார் என நம்பப்பட்ட நிலையில், அஜித்குமார் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளார். இதனால் படம் உருவாக்குவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் என எண்ணிய இயக்குனர் வினோத், அஜித்குமார் வெளிநாட்டில் இருந்தாலும் AK 61 படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதாவது மீதமிருக்கும் AK 61 படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, புனே இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு மும்பையில் அஜித் குமார் நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்க இருப்பதாக கூறிவருகின்றனர். மேலும் இந்த வருடம் தீபாவளி AK 61 படத்தை வெளியிடுவதற்காக விறுவிறுப்பாக இயக்கி வருவதாக கூறி வருகின்றனர்.

AK 61 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த தன்னுடைய காதல் மனைவி நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

No posts to display