பொன்னியின் செல்வன் போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.

0
பொன்னியின் செல்வன் போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், டீசர் வெளியீட்டிற்கு முன்பே படத்தில் உள்ள முக்கிய நடிகர்களின் கதாபாத்திரங்களை வெளியிட்டது படக்குழு. ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாகும் நிலையில், முதல் பாகமான ‘பிஎஸ்-1’ செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், இளவரசி குழந்தைவாய் த்ரிஷா என தொடங்கி, ஜெயம் ரவியின் தோற்றம் மற்றும் அருள்மொழி வர்மனாக வரும் கேரக்டர் போஸ்டரை இன்று வெளியிட்டது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு இன்று காலை ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அருள்மொழிவர்மன்’ கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராஜராஜ சோழனைச் சற்று புனைவுடன் இணைத்துஉருவாக்கியுள்ளார் கல்கி.

No posts to display