பட வாய்ப்புக்காக அந்த இடத்தில் முத்தம் கேட்ட இயக்குனர்! 22 வயதில் நடிகை யாஷிகாவுக்கு நேர்ந்த கொடுமை !!

0
பட வாய்ப்புக்காக அந்த இடத்தில் முத்தம் கேட்ட இயக்குனர்! 22 வயதில் நடிகை யாஷிகாவுக்கு நேர்ந்த கொடுமை !!

தமிழில் அடல்ட் காமெடி படமாக கெளதம் கார்த்தி நடிப்பில் உருவான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பை பிறந்து டெல்லியில் வளர்ந்த ஒரு மாடல் பெண்ணாக அறிமுகமாகிய முதல் படத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தார்.இப்படத்தினை அடுத்து பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்து ரசிகர்கள் பட்டாளத்தையே ஈர்த்து வந்தார். நிகழ்ச்சிக்கு பிறகு ஷோம்பி உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தும் வந்தார்.

இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யா நடித்த கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்த போது யாஷிகா கார் விபத்தில் படுகாயமடைந்தார். விபத்தில் தோழியை இழந்து 4 மாதங்கள் படுத்தபடுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் 4 மாதங்கள் கழித்து பழைய யாஷிகாவாக மாறி படப்பிடிப்பு, க்ளாமர் போட்டோஷூட் என ஆரம்பித்தார். கையில் பல படங்களை வைத்தும் எல்லைமீறிய புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா சமீபத்தில் தனக்கு நடந்த மீடூ பிரச்சனை பற்றி ஒரு தனியார் பேட்டியில் கூறியுள்ளார். ஒருமுறை வாய்ப்பிற்காக ஒரு இயக்குனர் ஆடிஷன் செய்ய அழைத்தார்.

Yashika Anand

அப்போது ஏர்போர்ட் சீன் செய்து காட்ட வேண்டும். கேமரா வைத்திருக்கிறேன், என்னை லிப்-கிஸ் பண்ணி நடித்து காட்ட வேண்டும்.நீங்கள் நல்லா பண்ணீங்கன்னா இந்த மூவி உங்களுக்கு கிடைக்கும் என்று இயக்குனர் கூறினார்.

Yashika

அதற்கு நான், நீங்க ஒண்ணும் ஹீரோ கிடையாது. இப்போ நான் சின்ன பொண்ணு என்னால் முடியாது என்றும் நான் எதற்கு இப்படி நடித்து காட்ட வேண்டும்.

Yashika

என் அம்மாவை கூப்பிடுங்க என்று அவர்கள் வந்தது, இந்த மாதிரி ஒரு லூசுங்களா இருக்காங்க, என்று அங்கிருந்த வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார். தற்போது யாஷிகா பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

No posts to display