மண்ணை கவ்வியதா ராக்கெட்ரி படத்தின் வசூல் .? போட்ட காசை கூட எடுக்க முடியாமல் திணறும் மாதவன் !!

0
மண்ணை கவ்வியதா ராக்கெட்ரி படத்தின் வசூல்  .? போட்ட  காசை கூட எடுக்க முடியாமல் திணறும் மாதவன் !!

மாதவன் இயக்கத்தில் அறிமுகமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ ஜூலை 1ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.1 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. படம் வெளியான நாளில் நேர்மறையான பதிலைப் பெற்றது, ஆனால் மிகக் குறைந்த ஓப்பனிங் இருந்தது; ஆனால் வார இறுதியில், திரைப்படம் அதன் வேகத்தை எடுத்தது மற்றும் கண்ணியமான எண்ணிக்கையிலான காலடிகளைக் கண்டது. ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ நாளுக்கு நாள் வசூலை இரட்டிப்பாக்கி வருகிறது.

ராக்கெட்ரி நம்பி படத்தை இயக்கி நடிக்கவும் செய்தார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராக்கெட்ரி நம்பி படம் முழுக்க முழுக்க நம்பினாராயணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது தொடர்ந்து மாதவனுக்கு நல்ல மகிழ்ச்சியான செய்திகள் வெளி வந்தாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் சொல்லி கொள்ளும்படி பிரம்மாண்ட வசூலை அள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் மட்டுமே ராக்கெட்ரி நம்பி திரைப்படம் சுமார் ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நாளிலும் ஒரு கோடி தான் வசூல் செய்துள்ளது. இதனால் தற்பொழுது படத்தின் மொத்த செலவையும் பட குழு எடுத்தாலே நல்லது என்பது போல இருக்கிறது.

ஏன் என்றால் நாளுக்கு நாள் ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அதிகரிக்க வேண்டும் ஆனால் ராக்கெட்ரி தொடர்ந்து ஒரே அளவிலான வசூலை அள்ளி வருகிறது. வசூலில் சற்று முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே லாபத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற நாட்களில் இந்த படம் லாபத்தை அள்ளினால் நல்லது.

இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. மாதவன் இயக்கும் இப்படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு. நம்பி நாராயணன் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவரது வாழ்நாள் முழுவதும் அவரை நிரூபிக்க முயன்ற அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

No posts to display