
தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘வாத்தி’ என்ற இருமொழி படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கான பணியை விரைவில் தொடங்கவுள்ளார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2021 இல் ‘ராக்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார், மேலும் அவர் ‘சானி காயிதம்’ படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
This is going to be EPIC!! Congratulations @dhanushkraja and to the entire team of this potential cinematic marvel #CaptainMiller @ArunMatheswaran @SathyaJyothi @gvprakash pic.twitter.com/WJZzpZ3ITd
— Karan Johar (@karanjohar) July 2, 2022
இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவவேற்பை பெற்றது. அதில் தனுஷ் அட்வெஞ்சர் பைக்கில் பின்னை துப்பாக்கியை போட்டுகொண்டு கெத்தாக வருவது போல கட்டப்பட்டிருக்கும். மிகவும் வித்தியாசமான லுக்கில் தனுஷ் இருந்ததால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
தனுஷ் தற்போது இயக்குனர் வெங்கட் ஆடலூரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடிகர் தனுஷ் மூன்று விதமான தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இதுவரை, இல்லாத அளவிற்கு அவரது கெட்டப் மிகவும் வித்தியாசமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால், ரசிகர்கள் படம் எப்போது தொடங்கும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
மேலும், தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருண் மாதேஸ்வரன் படம் டார்க் ஹூமர் கொண்டதாக இருக்கும் என்று முன்பு கூறியிருந்தார். இது தற்போது முன் தயாரிப்பு நிலையில் உள்ளது. ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.