Saturday, April 27, 2024 6:26 am

புற்றுநோயால் பிரபல நடிகர் உயிரிழப்பு! 30 வயதிலேயே உயிரிழந்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பிரபல நடிகர் கிஷோர் தாஸ் தனது 30வது வயதிலேயே புற்றுநோயால் உயிரிழந்தது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர செய்துள்ளது.

அசாமிய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ். தனது 30வது வயதை எட்டுவதற்குள்ளாகவே கிஷோர் தாஸ், தான இவர் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக விளங்கினார். 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.

கிஷோரின் ‘துருத் துருத்’ என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. இதுதவிர மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். கிஷோர் தாஸ் கடைசியாக ‘தாதா துமி டஸ்டோ போர்’ என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே நடிகர் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கவுஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.

சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிஷோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிஷோரின் உயிர் பிரிந்தது. அவரின் இறப்பு செய்தி அசாமி திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிஷோர் தாஸின் இறுதிச் சடங்குகள் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்