மிக பிரம்மாண்ட ஹிட் அடித்த இரண்டாம் பாகத்தில் அஜித் !! அஜித் எடுக்கப்போகும் முடிவு

0
மிக பிரம்மாண்ட ஹிட் அடித்த இரண்டாம் பாகத்தில் அஜித் !! அஜித் எடுக்கப்போகும் முடிவு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் பஞ்சதந்திரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவரின் நண்பர்களாக ஸ்ரீமன், ஜெயராம், யூகி சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் கமலுக்கு ஜோடியாக சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் ரிலீசான சமயத்தில் மக்களிடையே வரவேற்பை பெறாவிட்டாலும், பின் நாளில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது. கிரேஸி மோகனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்து இருந்தன. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் காம்போ மீண்டும் இணைந்து நடித்திருந்தது. அந்த புரோமோ மக்களிடையே வரவேற்பை பெற்றதோடு, பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பஞ்சதந்திரம் 2-ம் பாகத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். சமீப காலமாக அவர் சீரியஸான படங்களிலேயே நடித்து வருவதால், பஞ்சதந்திரம் போன்ற காமெடி படத்தில் நடித்தால் அது அவரை வேறொரு கோணத்தில் காட்டும் என ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அஜித் இந்த ஐடியாவுக்கு ஓகே சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No posts to display