சரியான வருமானம் இல்லாததால் விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? நீங்களே பாருங்க !

0
சரியான வருமானம் இல்லாததால் விஜய் டிவி ராமர் இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? நீங்களே பாருங்க !

நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் ராமர் ஒரு அரசு அதிகாரியாகவும் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி ஆர்டிஸ்டாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ராமர்.

இதையடுத்து பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நகைச்சுவை நடிகராக பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

தற்போது ஒரு அரசு அதிகாரியாகவும் ராமர் இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

மதுரையைச் சேர்ந்த எம்.பி சு.வெங்கடேசன், நகைச்சுவை நடிகர் ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமே மக்களால் அறியப்பட்ட ராமர், ஒரு பொறுப்புமிக்க அரசு அதிகாரி என்பதை அறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

No posts to display